செய்திகள் :

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரைக் கடித்த நாய்; பணியாளர்களின் அலட்சியமா?

post image

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் விசேச திருவிழா நாட்களில் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்ற 60 வயது முதியவர் தனது உறவினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை வந்துள்ளார்.

நாய் கடித்த முதியவர் முத்துராமன்

அவர்கள் 100 ரூபாய் சிறப்புக் கட்டண தரிசன வரிசையில் டிக்கெட் எடுத்து கோயிலுக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு காத்திருந்த நிலையில் முத்துராமன் 60 வயதான முதியோர் என்பதால் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது உள்பிரகாரத்தில் படுத்திருந்த நாய் ஒன்று முத்துராமனை காலில் கடித்துள்ளது. இதில் காலில் அவருக்கு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு வந்துள்ளார். பின்னர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில் அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அவரை உள்நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் ராமுவிடம்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, “திருக்கோயிலுக்குள் இருக்கும் பணியாளர்களை நாய்கள் மற்றும் மாடுகள் உள்ளே வராதவாறு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.  

நய் கடித்ததால் ஏற்பட்ட காயம்

இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றார். கோயில் உள்பிரகாரத்திற்குள் நாய் புகுந்தது எப்படி? பக்தரை நாய்  கடித்த சம்பவம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோயில் வளாகத்தையும் கம்பித் தடுப்புகளையும் தாண்டி உள் பிரகாரத்திற்குள் நாய் சுற்றித்திரிந்தது என்றால், பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனவும், அலட்சியமாக இருந்த பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் ப... மேலும் பார்க்க

திருவள்ளூர் திருவாலங்காட்டு வடாரண்யேசுவரர் கோயில்: திருவடி தரிசனம்; முக்தி தலம்; ரத்னசபை ரகசியங்கள்!

சைவர்களின் மோட்ச ஸ்தலம் என்று போற்றப்படும் தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் மூத்ததான ரத்தின சபை இங்குதான் உள்ளது. உத்திரகோசமங்கை, திருவாரூரைப் போல இதுவும் தோன்றிய காலத்தை அறிய முடியாத பழம்பதி. நாலூர்... மேலும் பார்க்க

திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!

திருவள்ளூர், சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். திவ்ய தேசங்களில் முக்கியமானது. இங்குதான் பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ராசி தீபம் ஏற்றுவது மிக முக்கியம் - ஏன் தெரியுமா?

வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. நினைத்தது நிறைவேற கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களுக்கா... மேலும் பார்க்க

தஞ்சை பெரிய கோயில்: 1000 கிலோ அன்னம்; 500 கிலோ காய்கனிகளால் அலங்காரம் | Photo Album

அன்னாபிஷேகம்பக்தர்கள் அன்னாபிஷேகம்பக்தர்கள்தஞ்சை பெரிய கோவில் அன்னாபிஷேகம்தஞ்சை பெரிய கோவில் தஞ்சை பெரிய கோவில் பிரசாதம் வாங்கும் பக்தர்கள்பிரசாதம் வாங்கும் பக்தர்கள்அகல் விளக்கு ஏற்றும் பக்தர்கள்தஞ்ச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் : 1,000 ஆண்டுப் பழைமை, சோழர்கால மூர்த்தி; வேண்டும் வரம் கிடைக்கும்!

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலங்கள் இந்த தேசம் முழுவதும் உள்ளன. அப்படிப்பட்ட தலங்களில் சென்று வழிபடும்போது சிவனருளும் முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி முருக... மேலும் பார்க்க