செய்திகள் :

SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

post image

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அதே நேரம், தமிழ்நாட்டின் ஆளும் திமுக தலைமையிலான அரசு SIR-க்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் சார்பில் மாவட்ட செயலாளர்களிடம் காணொளி வாயிலாக உரையாடினார். அதன் இறுதியில், SIR-ஐ எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``

நம்முடைய தொடர் எதிர்ப்புக்களை மீறி SIR பணிகள் தொடங்கிவிட்டது. இன்னும் நிறைய மக்களுக்கு SIR என்றால் என்ன என்றே முழுவதுமாகப் புரியவில்லை.

சரியான உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால் போதுமான கால அவகாசம் கொடுக்கப்படாமல், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இத்தனை அவசர அவசரமாக திருத்தப் பணிகள் மேற்கொள்வது சரியாக இருக்காது.

தேர்தல் ஆணயத்துடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறது என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஏற்கெனவே தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கேரள முதல்வர் பினராய விஜயன். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் இந்த SIR ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். SIR அறிவிப்பின் போதே இது சதி என உணர்ந்து எதிர்த்தோம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

வரும் 11-ம் தேதி எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மதச்சார்வற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம்.

SIR-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சனைகள் குழப்பங்கள்... வாக்காளர் தீவிர திருத்தத்துக்கான படிவத்தில் நம்முடையப் பெயருக்குப் பிறகு, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் யார் எனக் கேட்கிறார்கள்.

உறவினர் என்றால்... அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? எல்லாரும் தானே வாக்காளர் பட்டியில் இருப்பார்கள்? இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?

வாக்காளருடைய உறவினர் பெயர் எனச் சொல்லப்பட்டிருக்கக்கூடிய இடத்தில் பெயரும் பிறகு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டைய எண்ணும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர்னு கேட்கப்பட்டிருக்கிறது.

முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல், வாக்காளர் பட்டிலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது.  நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நன்கு படித்த அறிவார்ந்தவர்கள் கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றும். இந்த படிவத்தில் வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருகிறது.

ஆனால் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி புகைப்படம் ஒட்டுவது உங்கள் விருப்பம் எனக் கூறுகிறார். இது இன்னொரு இடியாப்பு சிக்கல். இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக எல்லா இடத்திலும் குழப்பம்தான்.

இந்த நிலையில எதிர்கட்சிகளை சேர்ந்த சில அதி மேதாவிகள் இந்த SIR பணியை மாநில அரசின் பணியாளர்கள் தான் செய்வார்கள். பிறகு ஏன் திமுக எதிர்க்கிறது எனக் கேட்கிறார்கள்.

ஒரு பணியாளர் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில இருந்தே அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டுதான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டடில் இருக்க மாட்டார்.

பொய்யா சொல்லி ஏழை மக்களுடைய வாக்குரிமையை பறிக்கலாம என எதிர்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.

ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை என்றக் குற்றச்சாட்டும் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியுடைய தேர்தல் ஆணையம் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்கீட்டு படிவங்களை இத்தனை குறுகை கால அவகாசத்தில எப்படி கொடுத்து வாங்கும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

போகிறப் போக்கில், திமுக-வும், கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எச்சரிப்பதுபோல, அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது.

இதையெல்லாம் மீறித்தான் நம் செயல்வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்குடைய வாக்கு நீக்கப்படுமா என்றால், அப்படி ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது.

அதை தடுக்க உங்களுடைய பகுதிக்குரிய தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்படிவத்தை வாங்கி, முறையாக பதிவிட்டு சமர்பித்து ஒப்புகை சீட்டை வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதுதான் உங்களுடைய வாக்குரிமையை பாதுகாக்கும். வாக்குரிமைதான் ஜனநாயகத்தோட மறுக்க முடியாத அடிப்படையான உரிமை.

தற்போதைய நிலையிலான SIR ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு. இதை எதிர்கொள்ள தி.மு.க சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாமல், SIR-ல் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய 08065 420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காக்க தி.மு.க உங்கள் தோழனா துணை நிற்க தயாராக இருக்கிறது. நம் வாக்குரிமையை பறிக்கக்கூடிய ஆபத்து வாசல் தேடி வந்திருக்கிறது.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்போடு இருந்து தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். SIR சதிவலையில சிக்காமல் நம் வாக்குரிமையை நிலைநாட்டுவோம்." எனப் பேசியிருக்கிறார்.

SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல். தற்போது சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.இந்தத் திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் ... மேலும் பார்க்க

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், ம... மேலும் பார்க்க

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்தில... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்" - அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!

இந்தியாவிலேயே சிறந்தப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருதளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன், அணுகுமுறை, உள்ளடக்கம் ம... மேலும் பார்க்க

``மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மனோ தங்கராஜ்1966 நவம்பர் 7-ம் தேதி பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் போன்ற அமைப்புகள், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றதாகவும், இதில் 8 பேர் படுகொலை செய்... மேலும் பார்க்க