மாலி: ``தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழர்கள்" - மத்திய, மாநில அரசுக்க...
`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?
மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விஆர்எல் டிராவல்ஸ் (VRL Travels) நிறுவனத்தைச் சேர்ந்த அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், ஓட்டுநரின் இந்தச் செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஓட்டுநர் ஸ்டீயரிங்கின் கீழே மொபைல் போனை வைத்துக்கொண்டு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்தவாறு அதிவேகத்தில் பேருந்தை ஓட்டி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
"விபத்துகள் நடக்க இதுவும் ஒரு காரணம்" என்ற தலைப்புடன் அந்த பயணி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விஆர்எல் டிராவல்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய நிறுவனம், அந்த ஓட்டுநரை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும், அச்சத்திற்கும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.















