காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது
``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி
பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்பர் டெர்மினல் வளாகத்தில் நமாஸ் செய்யத் தொடங்கினர்.
அவர்கள் விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்ததை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதனை பார்த்த பலரும், விமான நிலையத்திற்குள் இவ்வாறு வழிபாடு நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் வழங்கவில்லை.
How is this even allowed inside the T2 Terminal of Bengaluru International Airport?
— Vijay Prasad (@vijayrpbjp) November 9, 2025
Hon’ble Chief Minister @siddaramaiah and Minister @PriyankKharge do you approve of this?
Did these individuals obtain prior permission to offer Namaz in a high-security airport zone?
Why is it… pic.twitter.com/iwWK2rYWZa
இது குறித்து பா.ஜ.க. மாநில அரசை கேள்வி எழுப்பியுள்ளது. மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்த வீடியோவை வெளியிட்டு, “எப்படி பெங்களூரு விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்ய முதல்வர் சித்தராமையா அனுமதித்தார்?” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
அதோடு, விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் நமாஸ் செய்ய அவர்கள் ஏற்கனவே முன் அனுமதி பெற்றார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். முன் அனுமதி பெற்ற பிறகும் பாதயாத்திரை நடத்த தடை விதித்த அரசு, இப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் நமாஸ் செய்வதை கண்மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது. இது போன்ற செயல் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதோடு, இது அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர்.
















