செய்திகள் :

GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி

post image

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் சமூகப் பொறுப்பை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கைமாறு கருதாமல் திருப்பிக் கொடுப்பது எனும் இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஜி.ஆர்.டி.யின் பயணத்தின் இதயமாகத் திகழ்கிறது. அன்பும் நேர்மையும் கொண்ட தொடர்ச்சியான இந்த சமூக சேவை முயற்சிகளில் வெளிப்படுகிறது.

இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் சென்னையில் மிகவும் மதிக்கப்படும் இரண்டு சுகாதார நிறுவனங்களுக்கு ரூ. 50,00,000 லட்சம் நிதி உதவியுடன் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கண் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்கான கேரோட்டோமீட்டர் மருத்துவ உபகரணத்தை வாங்குவதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ. 25,00,000 வழங்கப்பட்டுள்ளது.

ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

மற்றும் அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ. 25,00,000 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகளின் ஆதரவு, பராமரிப்பு மற்றும் சிகிச்சை, ஆராய்ச்சி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கல்விக்காக வழங்கப்படுகிறது.

இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது, “ஜி.ஆர்.டி.யில், ஆரோக்கியமே வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். கண் பராமரிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சைத் துறைகளில் முன்னணி நிறுவனங்களை ஆதரிப்பது என்பது, எண்ணற்ற உயிர்களுக்கு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் கொண்டு வரும் பணியில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க வழிவகுக்கிறது. இந்த நிதியுதவி, மேம்பட்ட மருத்துவ சேவைகள் மிகவும் தேவையுள்ளவர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.” என்றார்.

இது குறித்து, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் கூறுகையில், “ஜி.ஆர்.டி.யின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்வாழ்த்துகளாலும் வடிவமைக்கப்பட்டதாகும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும் மருத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது, அந்த நம்பிக்கையை திருப்பிச் செலுத்தும் எங்கள் வழியாகும். சமூகங்கள் தங்கள் கடினமான தருணங்களில் இருக்கும் போது அவர்களுடன் துணை நிற்பதும், நலனுக்கான வழிகளை உருவாக்குவதும், ஒரு வணிகத்தை தாண்டிய சேவை என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட GRT ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. தங்கம், வைரம் பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், தலைமுறை தலைமுறையாக நம்பிக்கையின் மரபை உருவாக்கியுள்ளது.

தென்னிந்தியாவில் 65 கிளைகளுடன், மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை என மொத்தம் 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், அதன் சேவை செய்கின்ற சமூகங்களுக்கான நிலையான அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி, கலைநயத்தையும் உண்மையையும் இணைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜ... மேலும் பார்க்க

தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்

எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவு... மேலும் பார்க்க

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' - எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீக... மேலும் பார்க்க

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க