செய்திகள் :

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

post image

ஆசியாவில் உள்ள நாடுகளில் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி இருந்தாலும் சாப்பாட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பது அரிசி மட்டுமே. அதுவும் தெற்கு ஆசியாவில் சாப்பாட்டிற்கு அரிசி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த அரிசி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான ரக அரிசிகளை விளைவிக்கிறது. அதோடு ஒவ்வொரு நாட்டிலும் அரிசியை சமைக்கும் விதமும் மாறுபடுகிறது. இந்த அரிசியை மட்டும்தான் மக்களால் மலிவு விலையில் வாங்கி சாப்பிட முடிகிறது. ஆனால் இப்போது ஜப்பானில் ஆடம்பர ரக அரிசி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் காஸ்ட்லியான அரிசி

அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அரிசி-பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய ரக அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கின்மேமாய் பிரீமியம் என அழைக்கப்படும் அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலையுயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது.

அரிசி உற்பத்தியை மேம்படுத்த 2016ம் ஆண்டு கின்மேமாய் பிரீமியம் ரக அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே 840 கிராம் அரிசி ரூ.5490 க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதே இந்த அரிசி அதிக விலையுள்ள அரிசி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இப்போது அதே ரக அரிசி மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆகும்.

பொதுவாக அரிசியை சமைக்கும்போது, அதை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவது வழக்கம். அரிசியில் இருக்கும் அதிகப்படியான அழுக்குகளை அகற்ற சிலர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைப்பதுண்டு. ஆனால் ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி ஒரு மேம்படுத்தப்பட்ட மில் மூலம் தவிடு நீக்கப்படுகிறது. எனவே இந்த அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை.

நோயை எதிர்த்து போராடும்


வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

இந்த வகை அரிசியை உற்பத்தி செய்ய பிகாமாரு மற்றும் கோஷிஹிகாரி ரக நெல் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடமிருந்து எட்டு மடங்கு அதிக விலையில் வாங்குகின்றனர். அதை பிரத்யேகமான முறையில் சத்து குறையாமல் மில்லில் அரைத்து பாலிஷ் செய்கின்றனர். . இந்தப் பகுதி மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது. எனவே, இங்குள்ள வெப்பநிலை நெல் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. ஜப்பானில் 300 வகையான அரிசி ரகங்கள் இருக்கிறது.

ஜப்பானின் டோயோ ரைஸ் கார்ப்பரேஷின் தலைவராக இருந்த 91 வயதான தலைவரான கெய்ஜி சாய்கா கின்மேமாய் பிரீமிய அரிசி உற்பத்திக்கு காரணமாக இருந்தவர். 2016ம் இவர் தான் இந்த அரிசியை அறிமுகம் செய்தார்.

Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!

இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்ப... மேலும் பார்க்க

மழைக்கால உணவுகள்: சாப்பிட வேண்டியவை; சாப்பிடக்கூடாதவை! மருத்துவர் அட்வைஸ்

’ஹைய்யா! மழை’ என துள்ளிக் குதிக்க வைப்பதும், ’ஹைய்யோ... மழை’ என சலித்துக்கொள்ள வைப்பதும் என இரு வேறு உணர்ச்சிகளை நம்மிடம் இருந்து வரச் செய்வது இந்த மழைக்காலத்தின் சிறப்பு .இக்காலம் எப்பொழுது தொடங்குகி... மேலும் பார்க்க

முருங்கை முதல் சிவப்பரிசி வரை; மழைக்கேற்ற 4 ஹெல்தி சூப்!

விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்! மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ எ... மேலும் பார்க்க

Deepavali: அதிரசத்தோட ரூல் புக் படிச்சிருக்கீங்களா? இது அதிரசத்தோட Nostalgia பகிர்வு

அதிரசம்... பேர் என்னவோ இனிப்பு பலகாரம்தாங்க. ஆனா, இது வாங்குற வேலையிருக்கே... அப்பப்பா..! இன்னிக்கு ஆர்டர் போட்டா இனிக்க இனிக்க வீடு தேடி வந்திடுது அதிரசம். ஆனா, கால் நூற்றாண்டுக்கு முன்னாடி வரைக்கும்... மேலும் பார்க்க

தீபாவளி : பாரம்பரியம் மாறா செட்டிநாட்டுப் பலகாரங்கள் - இன்றும் எப்படி தனித்து நிற்கின்றன?

வாடிக்கையாளர்களை கவரத் துரித உணவுகளின் வெரைட்டி அதன் தேவைக்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு இன்று மவுசு அ... மேலும் பார்க்க

இருமல், சளியைப் போக்கும் `தங்கக் கஷாயம்' - செய்முறை சொல்லித்தரும் சித்த மருத்துவர்!

ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த 'தங்க கஷாயத்தைக்' கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன். இந்தக் கஷாயத்தின... மேலும் பார்க்க