சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்
இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசி, ஒரு சில வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் மு.க ஸ்டாலின், "உதயநிதி நடத்திய இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன் என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதைவிட, நான் நினைச்சதை விட சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன். தம்பி உதயநிதியின் கொள்கை பிடிப்பு செயல்பாடுகளை பார்க்கிற பொழுது, வள்ளுவர் கூறிய குரல் தான் ஞாபகம் வருகிறது.
'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்'
என்னும் குரலுக்கு ஏற்ப உதயநிதி செயல்பட்டு வருகிறார் என்று பெருமையோடு கூறுகிறேன்.

உதயநிதிக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்த அறிவுத் திருவிழாவை இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். நிச்சயமாக அறிவுத் திருவிழாவை பிரமாண்டமாக உதயநிதி நடத்துவார் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
















