சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு
இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று ராஜேந்திர சோழனைப் போல ஆட்சி செய்வார்" என்று பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் துரைமுருகன், "நான் கலைஞருடன் பல ஆண்டுகள் கூடவே இருந்து பணியாற்றியவன். இன்று நானே வியந்து பார்க்கின்ற அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றி கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின். அவரை நினைத்து மெத்தப் பெருமை கொள்கிறேன். ஏனென்றால் ஸ்டாலின் கலைஞர் அருகில் இருந்து பணியாற்றியவர். அதனால் சிறப்பாகத்தான் ஸ்டாலினும் பணியாற்றுவார்.
ஒருகாலத்தில் கலைஞர் உதயநிதியைப் பார்த்து, 'இவன் என்னையவே மிஞ்சிடுவான், தளபதி ஸ்டாலினையும் மிஞ்சிடுவான்' என்றார் என்னிடத்தில்!

ராஜராஜ சோழன் காந்தளூர் சாலைவரை ஆட்சி செய்தான். ஆனால், அவர் மகன் ராஜேந்திர சோழன் பர்மா, தாய்லாந்து வரையிலும் தனது ஆட்சியை நிறுவிக் காட்டினார்.
இன்றைக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஒருநாள் ராஜேந்திர சோழன்போல உதயநிதி ஆட்சி செய்வார்" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்

















