சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்...
குஜராத்: மிளகாய்ப் பொடி தூவி நகைக்கடையில் திருட முயன்ற பெண்; சுதாரித்த கடைக்காரரால் வைரலான சம்பவம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் நகைக்கடையில் மிளகாய் பொடியைத் தூவி கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொண்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள ரனீப் என்ற இடத்தில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் நகைக்கடை உரிமையாளர் மட்டும் கடையில் அமர்ந்து இருந்தார். அந்நேரத்தில் அங்கு முகத்தை மூடியபடி பெண் ஒருவர் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்தார்.
அவரை நகைக்கடைக்காரர் தனக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமரச் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அப்பெண் தன்னிடம் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து நகைக்கடைக்காரர் முகத்தில் போட்டார்.

இதை எதிர்பாராத நகைக்கடைக்காரர் சற்றும் தாமதிக்காமல் சுதாரித்துக்கொண்டு கண்ணில் மிளகாய் பொடி பட்டபோதும் தனது எதிரில் நின்ற பெண் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக அவரைக் கையைப் பிடித்துக்கொண்டார்.
அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவரைச் சரமாறியாக அடித்தார். அப்பெண் தப்ப முயன்றார். ஆனால் விடாமல் அப்பெண் முகத்திலும் தலையிலும் அடித்தார். அதோடு தனது இருக்கையிலிருந்து இறங்கி வெளியில் வந்து அவரை அடித்து அடித்தே கடையில் இருந்து வெளியில் அனுப்பினார்.
20 விநாடியில் 17 அடி அடித்துள்ளார். வெளியில் விட்டதும் அப்பெண் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இது குறித்து போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணைத் தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்வு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
















