கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ
கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் வெள்ளை நிற காரில் ஒரு பெண், ஒரு ஆண், பின் இருக்கையில் ஒருவர் இருந்தனர். “டிரைவர் இருக்கையில் இருந்தவர், அருகில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து அடித்தபோது அவர் வலியால் கத்தினார்.

அவருக்கு உதவி செய்வதற்காக சாலையில் கத்தி கூச்சலிட்டேன். அதற்குள் கார் சென்றுவிட்டது.” என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் காவல்துறையினரிடம் கூறிய ஆடியோ வெளியாகிருந்தது.
இந்நிலையில் காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தன் கணவர், மகனுடன் வெளியே சென்றபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் பேசும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில், “நாங்கள் வெளியில் சென்று வரும்போது கணவர் பழம் வாங்க இறங்க சொன்னார். நான் இறங்க மறுத்துவிட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
நான் காரில் இருந்து இறங்கி செல்ல முயற்சித்தேன். என் கணவரும், மகனும் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ‘நான் வரமாட்டேன்’ என்று கூறியதற்கு கணவர் காருக்குள் இழுத்து என்னை அடித்தார்.

பதிலுக்கு நானும் அவருக்கு ஒரு அடி கொடுத்தேன். மகன் சண்டை வேண்டாம் என்று சொன்னதால் காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். அவ்வளவுதான்.” என்று கூறியுள்ளார்.













