செய்திகள் :

தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

post image

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவுக்கும் சில கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்ராடூன் மாவட்டத்தில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள காந்தார் மற்றும் இந்திரானி ஆகிய இரண்டு பஞ்சாயத்தும் சேர்ந்து திருமணத்தில் தங்க நகைகள் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றன. அதன்படி திருமணத்தில் பெண்கள் மூக்குத்தி, கம்மல், தாலிச்செயின் ஆகிய மூன்று நகைகளை மட்டுமே அணிய வேண்டும்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

இந்த விதிகளை மீறினால் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

காந்தார் கிராமத்தைச் சேர்ந்த அஜய் சிங் என்பவர் இது குறித்து கூறுகையில், ''தங்கம் விலை அதிகரித்து வருவதால் அதிகமான பெண்கள் தங்கம் வாங்க வேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குடும்பத்தில் தகராறு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் சமமாக இருக்கவேண்டும் என்பதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது'' என்றார்.

இத்திட்டத்திற்குச் சில பெண்கள் ஆதரவு கொடுத்தாலும், மற்ற பெண்கள் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இது குறித்து அமலா சவுகான் என்ற பெண் கூறுகையில், ''பெண்களுக்கான தங்க ஆபரணங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவேண்டும். ஆண்கள் குடிக்கும் விலை அதிகமுள்ள மது வகைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். தங்கம் ஒரு முதலீடு. கஷ்டமான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மது மற்றும் தேவையில்லாத செலவுகளால் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.

நிஷா என்ற பெண் இது குறித்து கூறுகையில், ''திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைப்பதுதான் இதற்கெல்லாம் காரணமாகும். விலை உயர்ந்த மது வகைகள் பயன்படுத்துவதை ஆடம்பர திருமணமாக நினைக்கின்றனர். இதற்கு முன்பு வீட்டில் தயாரித்த மது வகைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது பிராண்ட் மது வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். திருமணத்தில் மது மற்றும் இறைச்சிக்குத் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

அருகில் உள்ள லோதாரா என்ற கிராமத்தில் ஒரு படி மேலே சென்று திருமணத்தில் மதுவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் ரூ.51,000 அபராதம் மற்றும் சமூகப் புறக்கணிப்பு செய்யவும் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

GOLD
GOLD

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் கவிதா கூறுகையில், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரும் மதுபானம் பரிமாறப்படும் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். உள்ளூர் பெண்கள் மற்றும் இளைஞர் குழுக்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.

திருமணங்களைத் தங்களது செல்வ செழிப்பை வெளிக்காட்டும் ஒன்றாக அதிகமானோர் நினைக்கின்றனர். புதிய விதிகள் மூலம் மீண்டும் இத்திருமணங்கள் சமூக கொண்டாட்டங்களாக மாறும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் சிங் என்ற முதியவர் தெரிவித்தார்.

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின்... மேலும் பார்க்க

`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜ... மேலும் பார்க்க

தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்

எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில்... மேலும் பார்க்க

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' - எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீக... மேலும் பார்க்க

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க