விழிப்புணர்வு முக்கியம்! - இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முற...
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பொதுவாக, கொசுக்கள் வெப்பமான, ஈரப்பதம் கொண்ட இடங்களில் தான் வாழும். குளிர்ச்சியான சூழல், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சிக்கு பொருந்தாது. அதனால் தான், வட துருவம் போன்ற கடும் குளிர் நாடுகளில் கொசுக்கள் வாழ முடியாது என்பதே இதுவரை விஞ்ஞான உலகத்தின் நம்பிக்கை.

ஆனால், கடந்த அக்டோபர் 23-ம் தேதி, ஒரு விஞ்ஞானி ஐஸ்லாந்தில் கொசுக்களை கண்டறிந்து, அதன் புகைப்படத்தையும் எடுத்துள்ளார். கொசுக்கள் அந்த நாட்டில் தோன்றுவது இதுவே முதல்முறை. இதனை அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளை வெளிப்படுத்தும் புதிய சுற்றுச்சூழல் எச்சரிக்கை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
“கொசுக்களால் இங்கு தகவமைத்துக் கொள்ள முடியுமா?”
ஐஸ்லாந்தின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்:
“இந்த கொசுக்கள் இங்கு தங்கள் இனத்தை நீண்டகாலம் நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பதை கவனிக்க வேண்டும். இவை வெப்பநிலைக்கு தழுவி வாழக் கூடிய இனமாகக் கூட இருக்கலாம்.”
அவர் கூறியதாவது, இந்த கொசுக்கள் “Culiseta annulata” எனப்படும் இனம் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த இனம் குளிர்ச்சியான பகுதிகளிலும் தற்காலிகமாக வாழக்கூடிய திறன் கொண்டதாக உலகின் சில இடங்களில் காணப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலின் தாக்கமா?
காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. உலகம் முழுவதும் குளிர்ந்த நாடுகளும் வெப்பமாக சூழலை நோக்கி நகரும் நிலையில் உள்ளன. அதனால், இத்தகைய கொசு இனங்கள் தற்போது ஐஸ்லாந்து போன்ற இடங்களிலும் வாழும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என்று ஆல்ஃபிரட்சன் கூறியுள்ளார்.
இன்னொரு சாத்தியம்
இந்த கொசுக்கள் வெப்பமான நாடுகளில் இருந்து கப்பல் கொள்கலன்கள் வழியாக வந்திருக்கலாம் என்பது மற்றொரு சாத்தியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஐஸ்லாந்தில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே கப்பல் போக்குவரத்து வழியாக கொசுக்கள் வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அடுத்த கட்டம் என்ன ?
அறிவியலாளர்கள் தற்போது அந்த பகுதிகளில் கொசு இனங்களால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடிகிறதா என்பதை ஆராயும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவை வெப்பமயமாதலின் ஒரு குறியீடா அல்லது மனிதச் செயல்பாடுகளின் விளைவா என்பதும் அடுத்த சில மாதங்களில் தெளிவாகும்.
இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. உலக காலநிலை மாற்றம் உலகின் எல்லா பகுதிகளிலும் கால் பதிக்கத் தொடங்கியிருப்பதற்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பின்குறிப்பு: இந்தக் கண்டுபிடிப்பை ஐஸ்லாந்தின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன் (Matthías Alfriðsson) PTI செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


















