செய்திகள் :

ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணைக்கான முக்கிய நீரோடைகளில் ஒன்றாகும் கேத்தி நீரோடை.

மது பாராக மாறிய நீர்நிலை
பார் கழிவுகள்

தொட்டபெட்டா மலை அடிவாரத்தில் உருவாகி, காட்டேரி அணைக்குச் செல்லும் இந்த நீரோடை, மலைப் பகுதிகளில் காய்கறி உற்பத்தி, கால்நடை மற்றும் வனவிலங்குகளுக்கான தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

மது பாராக மாறிய நீர்நிலை
பார் கழிவுகள்

இந்த நீரோடையை முறையாக தூர்வாருவதில்லை, ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லைகளை பராமரிப்பதில்லை என வருவாய் துறையை மக்கள் சாடி வந்த நிலையில், கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்த உள்ளூர் விவசாயிகள் கூறியதாவது:
“நீரோடைப் பக்கத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடையிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் நபர்கள், நீரோடை கரையில் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். தடை செய்யப்பட்ட டம்ளர்கள், ஜூஸ் பாக்கெட்டுகள் போன்றவற்றை இங்கேயே வீசி செல்கின்றனர்.

நீரோடையிலிருந்து விளை நிலங்கள் வரை இந்தக் கழிவுகளே குவிந்து கிடக்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிப்படைந்து வருகின்றன.

பார் கழிவுகள்

இது குறித்து வனத்துறை மற்றும் குன்னூர் வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் கவனிக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து குன்னூர் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, “நீரோடையில் அத்துமீறும் நபர்களை கேத்தி காவல்துறையுடன் இணைந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்ற வழக்கமான பதிலையே தெரிவித்தனர்.

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த... மேலும் பார்க்க

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞா... மேலும் பார்க்க

சென்னை: கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி; ஆகாயத்தாமரை அகற்றும் ஊழியர்கள் | Photo Album

கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கை... மேலும் பார்க்க

விழுப்புரம்: நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் படுகை அணைகள்..!

வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் படுகை அணைகள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் குளித்து மகிழும் வாலிபர்கள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்பட... மேலும் பார்க்க