செய்திகள் :

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

post image

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரின் மதிப்பை விட 20 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்பட்ட இந்த ரசீது, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறை தங்களது தவறைத் திருத்தி, அபராதத் தொகையை ரூ.4,000 ஆகக் குறைத்துள்ளது.​

என்ன நடந்தது?

முசாபர்நகரின் மண்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அன்மோல் சிங்கால் என்ற இளைஞர் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையில் அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாததையும், வாகனத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததையும் கண்டறிந்தபின் அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.​

Traffic signal

இதைத் தொடர்ந்து, போலீசார் அவருக்கு ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளனர். ஸ்கூட்டரின் மதிப்பே சுமார் ரூ.1 லட்சம்தான் என்கிற நிலையில், 20 மடங்குக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த அபராத ரசீதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தப் பதிவு வேகமாகப் பரவி, உத்தரப் பிரதேச காவல்துறைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.​

இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து முசாபர்நகர் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் அதுல் சௌபே விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சலான் வழங்கிய துணை ஆய்வாளர் '207' என்ற எண்ணுக்குப் பிறகு 'மோட்டார் வாகனச் சட்டம்' என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்.

இதனால், '207' என்ற எண்ணும், இந்த பிரிவின் கீழ் விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராத தொகையான ரூ.4,000-ம் ஒன்றாக இணைந்து ரூ.20,74,000 என பதிவாகிவிட்டது. இது ஒரு எழுத்துப் பிழைதான்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும் அன்மோல் சிங்கால் ரூ.4,000 மட்டும் அபராதம் செலுத்தினால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?

மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கட... மேலும் பார்க்க

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய... மேலும் பார்க்க

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்ப... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க