``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
திருச்சி: ``முதல்வர் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நடந்த படுகொலை'' - அண்ணாமலை
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்த தாமரைச் செல்வன், இன்று காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்குப் புறப்பட்டார்.
அப்போது ஐந்துபேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளுடன் அவரை வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய தாமரைச் செல்வன், அருகில் இருந்த பீமா நகர் காவலர் குடியிருப்பின், ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டுக்குள் ஓடினார். அப்போது செல்வராஜ் வீட்டுக்குள் இருந்திருக்கிறார்.
தாமரைச் செல்வனைப் பின் தொடர்ந்து ஓடிய கும்பல் வீட்டுக்குள் புகுந்து, தாமரைச் செல்வனை சரமாரியாக வெட்டியது. இதில் தாமரைச் செல்வனின் தலை துண்டானது. பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றதில் ஒருவன் சிக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து வெளியான தகவலில், விசாரணையில் பிடிபட்டவன் பெயர் இளமாறன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிய வருகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் இருக்கும் அரசு சுற்றுலா மாளிகையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.

இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















