செய்திகள் :

மாலி: ``தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழர்கள்" - மத்திய, மாநில அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

post image

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதே நேரம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி பகுதியிலிருந்து ஐந்து இந்தியர்கள் மாலியின் ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது.

அதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்த மின்சார ஒப்பந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனியார் செய்திக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 5 இந்தியர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

மாலி ஜனாதிபதி அசிமி கோய்டா
மாலி ஜனாதிபதி அசிமி கோய்டா

இதனால், மற்ற இந்தியர்களை தலைநகர் பமகோவிலில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.” என்றார்.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த சில நாள்களுக்கு முன் 5 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

Bamako, Mali
மாலி

அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர்.

கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர்.

குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும். மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தீவிரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிணைத் தொகை கேட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்துவதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் மாலி நாட்டில் இயல்பாக நடைபெற்று வருகின்றன.

அன்புமணி
அன்புமணி

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நாடுகளுக்கு குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

RSS :'தமிழர்கள் கோவிலுக்கு செல்வதில்லையா?திராவிடர்களும் இந்துக்கள்தான்!' -மோகன் பகவத் புது விளக்கம்!

பெங்களூருவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு கருத்தரங்கில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். RSS 100: மோகன் பகவத்ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு க... மேலும் பார்க்க

"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியின் இளைய மகன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"பழனியாண்டிக்கும், கழகத்திற்குமான உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டது அ... மேலும் பார்க்க

`தமிழ்நாடு ஆம்னி பஸ்களுக்கு சிறை' - கோடிக்கணக்கில் அபராதம் விதித்த கேரளா, கர்நாடகா; என்ன பிரச்னை?

தமிழ்நாட்டை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்குள் செல்ல கடந்த சில நாள்களாக சிக்கல்களையும், அபராதத்தையும் சந்தித்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை), தமிழ்நாட்டில் இருந்து ... மேலும் பார்க்க

SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல். தற்போது சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.இந்தத் திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் ... மேலும் பார்க்க

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், ம... மேலும் பார்க்க

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்தில... மேலும் பார்க்க