``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை வெளியேற்றாமல் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்று வெளியாகியிருந்த முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. சபரி, பார்வதியை கீழே தள்ளிவிட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் பார்வதிக்கு கண்ணில் அடிபட்டிருக்கிறது. "இங்க எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லத்தான் செய்வேன். முதல்ல எல்லோரும் கேர் பண்ணேன்னு சொல்றாங்கள்ள... யார் கேர் பண்ணாங்க?

எல்லோரும் சேர்ந்து டிஸ்குவாலிபைடு'னு தான் சொன்னாங்க" என பார்வதி சபரியிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இதனைதொடர்ந்து, " அவன் அவ்வளவு உயரமா இருக்கான். அந்த பையனும் நானும் மோதும்போது உங்களுக்கு தெரிலையா? அப்போ உங்க கேர் எங்கப் போச்சு? என காட்டமாக கம்ருதீன் மற்றும் வினோத்திடம் பேசுகிறார்.

















