செய்திகள் :

BB Tamil 9: "நீங்க தாராளமா வெளிய வந்துரலாம்" - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர்.

வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், "நாட்களைக் கடந்தா போதும் என் அக்கவுண்ட்ல பணம் ஏறிறும்னு இந்த வீட்டில செயல்படுறது யாரு?" என விஜய் சேதுபதி கேட்க எல்லோரும் அரோராவைக் கைக்காட்டுகின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

"எல்லா யுக்தியும் தெரியும். ஆனா விளையாட மாட்டிங்குறாங்க", "யாரையும் காயப்படுத்திடக்கூடாது'னு பேசவே மாட்டிங்குறாங்க" என அரோராவைச் சொல்கின்றனர்.

"வெளிய போணும்னா சொல்லிடுங்க. நானே பிக் பாஸ் கிட்ட சொல்லிடுறேன். தாராளமா வெளிய வந்துரலாம்" என்று விஜய் சேதுபதி அரோராவிடம் காட்டமாகப் பேசுகிறார்.

BB Tamil 9 Day 34: எவிக்ட் ஆன துஷார்; Prank பஞ்சாயத்தை நீண்ட நேரத்திற்கு இழுத்த விசே - நடந்தது என்ன?

வழக்கமான ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரத்தோடு விஜய் சேதுபதி இருந்தாலும் இந்த எபிசோடில் அவர் அடித்த நையாண்டியான பன்ச் லைன்கள் அற்புதம். திவாகர், பாரு, கம்ருதீன், திவ்யா என்று பலரையும் நக்கலடித்த விதம் அரும... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான்தான் அந்த ஐடியாவைக் கொடுத்தேன்; ஆனா" - அமித்தைச் சாடிய FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 33: என்னது பாரு Best performer-ஆ? ‘வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக’ தேர்வான சாண்ட்ரா!

'வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியம். அப்படியாவது அவர் திருந்துவார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து வாக்களித்தார்களா, அல்லது உண்மையில... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: முதல் டபுள் எவிக்‌ஷன்! வெளியேறிய இருவர் யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் முதல் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்திருக்கிறது.வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், துஷார், பிரவீன், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இ... மேலும் பார்க்க

BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு க... மேலும் பார்க்க