சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "முதல்வர் செய்வது டிராமா"...
BB TAMIL 9 DAY 33: என்னது பாரு Best performer-ஆ? ‘வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக’ தேர்வான சாண்ட்ரா!
'வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியம்.
அப்படியாவது அவர் திருந்துவார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து வாக்களித்தார்களா, அல்லது உண்மையிலேயே பாருவிற்கு இன்னொரு பாசிட்டிவ் பக்கம் இருக்கிறதா, அல்லது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரு அடக்கி வாசித்தாரா, அல்லது கேப்டன் ஆன பிறகு பாருவைக் கவனித்துக் கொள்ளலாம் என்கிற உள்குத்து காரணமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்கக வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 33
‘இது எங்க பல்லேலக்கா’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. விருந்தினர்கள் கிளம்ப வேண்டிய நேரம் “நீங்க இங்க ரீல்ஸ் போட வரலை” என்று திவாகருக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் தீபக். யார், எத்தனை முறை சொன்னால் என்ன? அவர்கள் போன மறுநிமிடமே நெஞ்சில் குத்திக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளும் அபத்தத்தை திவாகர் நிறுத்தப் போவதில்லை.
“வினோத் சொல்றதையெல்லாம் நீங்க கிண்டலா எடுத்துட்டு கோபப்பட தேவையில்லை. ரெண்டு பேர் காம்போ நல்லாயிருக்கு. செந்தில் - கவுண்டமணி மாதிரி” என்று தீபக் சொல்ல, “யாரு.. செந்தில்.. யாரு கவுண்டமணின்னு அப்ப கூட சண்டை வந்துடும்” என்று விக்ரம் சொன்னது அல்டிமேட்.

இந்த வாரம் சிறப்பாகப் பங்கேற்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். பெரும்பான்மையோர் பாருவின் பெயரைச் சொன்னதில், நமக்கு மட்டுமல்ல, பாருவிற்கே ஆச்சரியம்தான்.
‘ஓ.. மை காட்.. என்னால நம்பவே முடியலை’ என்று மகிழ்ந்து போனார். பாருவின் பரம எதிரிகளான கெமி, சுபிக்ஷா கூட பாருவின் பெயரைச் சொன்ன போது நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். (இந்தச் சம்பவம்லாம் எப்பத்தான் நடந்தது?!)
“என்னது! பாரு.. Best performer-ஆ?”
தனது முறை வந்த போது பிரவீன் செய்த டிராமா நன்றாக இருந்தது. ஒரு சின்ன விஷயத்தைக் கூட சுவாரசியமாக நிகழ்த்துவது என்பதுதான் இதுதான். (ஆக்சுவலி.. இதையெல்லாம் விக்ரம் செய்ய வேண்டும்!)
சொல்ல வந்த பெயரைச் சொல்ல முடியாமல், வாய் இழுத்துக் கொள்வது போல கோணி விட்டு, கிடைத்த இடைவெளியில் ‘பார்வதி’ என்று சட்டென்று சொன்னது ரசிக்கத்தக்க நடிப்பு.
பாரு உள்ளிட்ட அனைவருமே இந்தக் குறும்பை ரசித்தாார்கள். பார்வதியின் பெயரைச் சொல்வது அத்தனைச் சிரமமான விஷயமாம்.
விக்ரம், திவாகர், வியானா, எஃப்ஜே, பிரஜின் ஆகியோருக்கும் கூட வாக்குகள் கிடைத்தன. ‘இந்த வாரம் முழுக்க சண்டை போடாம சாந்த சொரூபியா திவாகர் இருந்தார்’ என்று காரணத்தைச் சொன்னார் ரம்யா. பாரு கட்சியிலிருந்து தாவி, வியானாவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியிருக்கும் திவாகர், வியானாவின் பெயரை முழங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

இறுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற பாரு, அடுத்த வார தலைவர் போட்டிக்கு தலைவர் ஆனார். 'அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த பாவங்களை’ என்று பாவமன்னிப்பு கேட்ட பாரு, “இனிமேத்தான் இ்ந்தக் காளியோட இன்னொரு முகத்தைப் பார்க்கப் போறீங்க” என்று சொல்லியிருக்கிறார். (நாதஸ் திருந்திட்டானாம்.. யாரு சொன்னா.. அவனேதான்!). “பாரு வீக்கெண்ட் மோடுக்கு வந்துட்டா” என்று வினோத் அடித்த கமெண்ட் ரகளையானது.
“பாருவிற்குத்தான் அதிக ஓட்டு வந்திருக்கு” என்று திவ்யா சொல்ல, ‘இருந்துட்டுப் போகட்டும்’ என்று ‘பாய்ஸ்’ படத்தின் விவேக் மாதிரி லெஃப்ட் ஹாண்டில் பிக் பாஸ் டீல் செய்தது சுவாரசியம்.
“முடிவைச் சொல்லுங்க” என்று கேட்டு பாருவிற்கு வாழ்த்து சொன்ன பிக் பாஸ், “இந்த முறை க்ரூப்பிஸம்தான் உங்களை ஜெயிக்க வெச்சது'' என்று ஊமைக்குத்தாக குத்தியது ‘நச்’ கமெண்ட்.
‘வொர்ஸ்ட் ஃபர்பார்மர்களாக’ தேர்வான சாண்ட்ரா மற்றும் எஃப்ஜே
ஆக பாரு, சபரி, பிரவீன் ஆகிய மூவரும் அடுத்த வார தல போட்டியில் மோதுவார்கள். பாரு இருக்கும் போது திவ்யாவும் இருந்தால் போட்டி சூடு பிடிக்கும் என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னவோ. திவ்யாவையும் ‘தல’ போட்டியில் இறக்கி விட்டிருக்கிறார்.
“பெஸ்ட் ஃபர்பார்மர் தேர்வை நீங்கள் நடத்திய விதம் பார்த்து என் மனம் குளிர்ந்து விட்டது. வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வையும் அதே போல் நடத்துங்கள்” என்றார் பிக் பாஸ்.
விருந்தினர்கள் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டது, மற்றவர்களை உழைப்பை வீணடித்தது, திவாகரின் பணியைப் போதிய காரணமே இல்லாமல் தூக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக சாண்ட்ராவைப் பலரும் சொன்னார்கள்.
எஃப்ஜேவிற்கும் நிறைய வாக்குகள் விழுந்தன. கேரக்டர் என்றெல்லாம் திவாகர் பேசியதால் பலத்த ஆட்சேபத்தைத் தெரிவித்தார் எஃப்ஜே. கம்ருதீனின் பெயரைச் சொன்னார் திவ்யா. பிரவீனை அடிக்கப் பாய்ந்த விவகாரம்.

சாண்ட்ராவிற்குத் தரப்பட்டது சீக்ரெட் டாஸ்க். எனவேதான் அவர் அப்படியெல்லாம் செய்தார். (கொஞ்சம் ஓவராகப் போனார் என்பதும் உண்மைதான்!). அந்த ரகசியத்தை அவிழ்க்காமல் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் சாண்ட்ரா என்கிற தேர்வை பிக் பாஸ் எப்படி அனுமதித்தார் என்பது தெரியவில்லை.
போலவே கம்ருதீன் செய்ததும் prank மட்டும்தான். இந்த ரகசியம் வெளிப்பட்டால்தான் சம்பந்தப்பட்டவர்களின் மீதான கோபம் மறையும். வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக இதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் போலிருக்கிறது.
வொர்ஸ்ட் ஃபர்பார்மர்களாக சாண்ட்ராவும் எஃப்ஜேவும் தேர்வான பிறகு “ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்” என்று அநாவசியமாக ஓடி வந்தார் பாரு. அது அவருக்கே பிறகு பேக் பயராகி விட்டது.
“பிரஜின் அண்ணா கிட்ட தோள்ல கை போட்டு பேச வந்த போது படார்ன்னு கைய தட்டி விட்டாரு. இன்னமும் கூட வலிக்குது. இனிமே அப்படிச் செய்யாதீங்க” என்று பாரு செய்த டிராமா அவருக்கே வினையானது.
பாரு செய்த ஓவர் டிராமா, பேக் பயர் ஆன காமெடி
இதற்கு விளக்கம் சொல்ல வந்த பிரஜின், “எனக்கு பிரெண்ட்ஸ் யாரும் அவ்வளவா கிடையாது. பொண்ணுங்க கிட்ட தள்ளித்தான் பழகுவேன். நான் கைய தட்டி விட்டது எப்படி பாருவிற்கு ஹர்ட் ஆச்சோ, அப்படியே எனக்கும் அது ஹர்ட் ஆச்சு.
எனக்கு குடும்பம், குட்டிங்க இருக்கு. பக்கத்திலேயே வொஃய்பும் இருக்காங்க. என் இமேஜ் என்னவாகும். எனக்கு இங்க அண்ணன், தங்கச்சி உறவெல்லாம் வேண்டாம்” என்று சொன்னதும் பாருவின் முகம் வாடிப் போனது.

“நான் அண்ணான்னு கூப்பிட்டேன்” என்று பாரு தன்னை டிஃபெண்ட் செய்ய முயன்ற போது குறுக்கிட்ட சாண்ட்ரா “பிரஜினை நான் சைட் அடிக்கறேன்னு பாரு சொன்னா” என்று டைமிங்கில் போட்டுக் கொடுத்தார். “அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது” என்று பாரு சமாளிக்க வேண்டியிருந்தது.
வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வந்த பிறகு அணிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாருவிற்கும் இப்போது க்ரூப் ஃபார்ம் ஆகி விட்டது.
ஒரு காலத்தில் பாருவைப் பிடிக்காமல் இருந்த வியானா மற்றும் சுபிக்ஷா இப்போது பாருவிடம் வந்து பிரஜின் கையைத் தட்டி விட்ட விவகாரத்தைப் பற்றி புறணி பேசினார்கள்.
“அவரு.. தப்பான ஆங்கிள்ல பிரொஜக்ட் செய்யப் பார்க்கறாரு” என்று ஏற்றி விட்டார் சுபிக்ஷா. “நான் ஒருவனுக்காகப் படைக்கப்பட்டவள். பொண்ணுங்கன்னா இன்செக்யூரா ஃபீல் பண்றார்னா.. ஏன் இங்க வரணும்?” என்றெல்லாம் லாஜிக் பேசிக் கொண்டிருந்தார் பாரு. ஆனால் இதே பாருதான், கம்ருதீன் செய்த ‘பேட் டச்’ பற்றி திவாகரிடம் அனத்திக் கொண்டிருந்தார்.
இதே விஷயத்தை கம்ருதீன், பிரஜீனிடம் கொண்டு சென்ற போது “நானா இதை ஆரம்பிச்சேன்.. அவதான் பொதுவுல கொண்டு வந்தா.. எனக்கு அப்படி கை போட்டது பிடிக்கலை. தட்டி விட்டேன்” என்பது போல் விளக்கமளித்தார் பிரஜின். ‘No means No’ என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சோ்த்துத்தான்.

பிறகு பெருங்காய விளம்பரத்திற்காக நடந்த டாஸ்க்கில், வீட்டாரின் அன்பைப் பெற்றவராக விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் மோர் கொடுத்து மகிழ்ந்தார். சிறையில் இருக்கும் சாண்ட்ராவிடம், பிரஜின் பேசிக் கொண்டிருந்தார்.
வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு பற்றிய பேச்சு. ‘கிச்சன்ல திவாகர் நல்லாத்தான் வேலை செஞ்சார்’ என்று ஒப்புக் கொண்டார் சாண்ட்ரா. “Prankதான்.. இருந்தாலும் கம்ருதீன் பெயரை பலரும் சொல்லலை.. பாத்தியா.. அவங்க க்ரூப்பா சேர்ந்துட்டாங்க” என்றார் பிரஜின்.
ஆக. இந்த வார விசாரணை நாளில் சாண்ட்ரா செய்த சீக்ரெட் டாஸ்க் முக்கியமான டாப்பிக்காக இருக்கலாம். விருந்தினர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஹோட்டல் டாஸ்க்கில் சொதப்பியதற்காக அர்ச்சனையும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.



















