Gouri Kishan: ``தோற்றத்தைக் குறிவைக்கும் கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை" - க...
AMMA: "யார் செய்தாலும் தவறுதான்; வலியைப் புரிந்துகொள்கிறோம் கௌரி" - மலையாள திரைக்கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய சினிமாவில் நடிகை கௌரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக, கௌரி கிஷன் நடித்திருக்கும் `OTHERS' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதற்கு முன்பாக ஏற்கெனவே நடந்த இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கௌரி கிஷனின் எடை என்னவென்று படத்தின் ஹீரோவிடம் கேட்ட நிருபர் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்திருந்தார்.

அப்போது, கௌரி கிஷன் அந்த நிருபரிடம், ``நீங்க எப்படி அதைக் கேட்கலாம். அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்" என்று நேரடியாகக் கேட்டார்.
இந்த விவகாரத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA-வும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறது.
இதுகுறித்து AMMA தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``உங்களின் வலியை AMMA புரிந்துகொள்கிறது கௌரி. யார், எங்கு, எப்போது செய்தாலும் உருவ கேலி (body-shaming) தவறு என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று பதிவிட்டிருக்கிறது.
















