KAANTHA Team Exclusive Interview | Dulquer Salmaan, Rana Daggubati, Samuthirakan...
அதிமுக: "உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது" - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (நவ. 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது, "எனக்கு சங்கங்களிலிருந்து நிறைய கடிதங்கள் வந்தன. கண்ணீர் சிந்தும் அளவிற்கு அந்தக் கடிதங்கள் இருந்தன.
உங்களுடைய தியாகத்தைப் பற்றி உழைப்பைப் பற்றி நீங்கள் செய்கின்ற சேவையைப் பற்றி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது.

உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது. அப்படி இருந்ததனால்தான் புரட்சித் தலைவரை யாரும் வீழ்த்த முடியவில்லை.
உழைப்பாலும், தியாகத்தாலும் உயர்ந்தவர். கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் தன்மை படைத்தவர்.
தொண்டர்களுக்காக முன்னின்று தியாகங்கள் செய்தவர். அதேபோலத்தான் அம்மாவும் (ஜெயலலிதா) செயல்பட்டார்.
இயக்கத்தைக் காப்பதற்கு 1989-ல் தனது நகைகளை வழங்கி இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார். அவர்கள் வழியில்தான் நாங்களும் செயல்படுகிறோம்" என்று பேசியிருக்கிறார்.












