KAANTHA Team Exclusive Interview | Dulquer Salmaan, Rana Daggubati, Samuthirakan...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: "SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" - ஸ்டாலின்
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது...
"தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை
நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்,
வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,

இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதிவலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பைப் பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்!" என்றார்.












