செய்திகள் :

``தெருநாய்களை பராமரிக்கச் சொல்லி சித்ரவதை'' - மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவன்

post image

கணவன்–மனைவி சில நேரங்களில் எதற்காக சண்டையிடுகிறோம் என்று தெரியாமலே சண்டையிட்டு பிரிந்து விடுவர். சில நேரங்களில் சிறிய பிரச்சினையிலும் கணவன்–மனைவி விவாகரத்து செய்து விடுவார்கள். குஜராத்தில் ஒரு தம்பதியின் பிரிவிற்குத் தெருநாய்களே காரணமாக இருந்துள்ளன.

அகமதாபாத்தில் வசிக்கும் ரஞ்சித் பாட்டீல், 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில் அவர், “என் மனைவி தெருநாய்கள் மீது அதிக அன்பு செலுத்த ஆரம்பித்தார். இதனால் தெருநாய்களை வீட்டிற்கு கொண்டு வரத் தொடங்கினார். ஆனால் நாங்கள் வசித்த கட்டிடத்திற்குள் தெருநாய்களை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும், கூடுதலாக தெருநாய்களை வீட்டிற்கே கொண்டு வந்தார்,” என்று கூறியுள்ளார்.

தெருநாய்
தெருநாய்

அந்த தெருநாய்களை சுத்தம் செய்து பராமரிக்கவும், அவற்றுக்கு சாப்பாடு செய்யவும் என்னிடம் மனைவி கேட்டுக்கொண்டார். தெருநாய்கள் படுக்கையை ஆக்கிரமித்தன. அவற்றில் ஒன்று என்னை கடித்தும் விட்டது. தெருநாய்களால் பக்கத்து வீட்டாருடன் தகராறு ஏற்பட்டது. இதனுடன் தொடர்பாக பக்கத்து வீட்டாரே போலீசில் புகார் செய்தனர்.

எனது மனைவி விலங்குகள் நல அமைப்பில் இணைந்திருந்ததால், அடிக்கடி அடுத்தவர்களைப் பற்றி புகார் செய்துவந்தார். இதனால் அடிக்கடி மனைவியுடன் போலீஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் செல்ல மறுத்தால், தன்னை அவமானப்படுத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம்பத்தியம் பாதிப்பு

இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு என்னால் தாம்பத்திய உறவில் கூட சரியாக ஈடுபட முடியவில்லை. 2007ம் ஆண்டு எனது மனைவி ரேடியோ ஜாக்கி ஒன்றைத் தொடங்கினார். அதில் பிராங்க் கால் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எனக்கு திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக பிராங்க் காலில் கூறினர்.

இதனால் வேலை செய்யும் இடத்தில் எனக்கு அவமானம் ஏற்பட்டது. எனவே பெங்களூருக்கு தப்பிச்சென்றேன். அப்படி இருந்தும், தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ரஞ்சித் பட்டேல் மனுத்தாக்கல் செய்தார்.

பிராணிகளால் விவாகரத்து செய்யும் தம்பதி
பிராணிகளால் விவாகரத்து செய்யும் தம்பதி

இம்மனு மீதான விசாரணையின்போது தனது கணவர்தான் விலங்குகளிடம் பாசமாக இருக்கும்படி சொன்னார். அவர் இப்போது என்னை கைவிட்டுள்ளாார் என்று கூறி ரஞ்சித் பட்டேல் தெருநாய்களை எடுத்து கொஞ்சும் புகைப்படங்களையும் கோர்ட்டில் அப்பெண் தாக்கல் செய்தார்.

இதையடுத்து விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ரஞ்சித் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்.

இதில் தனது மனைவிக்கு ஒரே தவணையாக ரூ.15 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவி ரூ.2 கோடி கேட்டுள்ளார்.

Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்' சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரி... மேலும் பார்க்க

`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?

மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கட... மேலும் பார்க்க

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய... மேலும் பார்க்க

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்ப... மேலும் பார்க்க