விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்...
Walkaroo: இந்தியாவின் நம்பர் 1 PU காலணி பிராண்ட் என அங்கீகரிக்கப்பட்ட வாக்கரூ
வாக்கரூ – இந்தியாவின் நம்பர் 1 PU காலணி பிராண்ட் என அங்கீகரிக்கப்பட்டது.
நாட்டில் உருவான முன்னணி காலணிப் பிராண்ட் வாக்கரூ, உலகப் புகழ் பெற்ற மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் கேடன்ஸ் இன்டர்நேஷனல் (Kadence International) நடத்திய தேசிய அளவிலான ஆய்வில், “இந்தியாவின் நம்பர் 1 PU காலணி பிராண்ட்” என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

தொடக்கம் முதலே வாக்கரூ, பாதத்துக்கு மென்மை தரும் வடிவமைப்புகளையும், எல்லோருக்கும் ஏற்ற விலையில் முன்னிலைப்படுத்தி, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது. இந்த அங்கீகாரம், நுகர்வோருடனான வாக்கரூவின் நெருக்கத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சாதனையைப் பற்றி வாக்கரூ நிறுவனத் தலைவர் திரு. நௌஷாத் கூறியதாவது:
“இந்தியாவின் நம்பர் 1 PU காலணிப் பிராண்ட் என்ற அங்கீகாரம் எங்களுக்கு பெருமையோடு சேர்ந்து ஆழ்ந்த நன்றியுணர்வையும் அளிக்கிறது. தினமும் வாக்கரூவை அணிந்து நடக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையும், எங்கள் டீலர்கள், ரீடெய்லர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இதற்குக் காரணம். நுகர்வோரின் தேவைகளை முன்னிலைப்படுத்தியே செயல்பட்டதால் தான் இன்று இந்த முன்னணியை அடைந்துள்ளோம்.”
2012 ஆம் ஆண்டில் தொடங்கிய வாக்கரூ, இன்று இந்தியாவின் மிகப்பெரிய PU காலணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தினசரி 5 லட்சம் ஜோடி PU காலணிகள் தயாரிக்கும் திறனுடன், 700-க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேலான ரீடெய்லர்களின் ஆதரவால், வாக்கரூ நகரங்களிலும் கிராமங்களிலும் நுகர்வோரிடம் எளிதில் சென்றடைகிறது
ஃபேஷனும் மென்மையும் இணைக்கும் வாக்கரூவின் PU வரிசை, இலகுவான வடிவமைப்பும் மேம்பட்ட குஷனிங்கும் மூலம் — எல்லோருக்கும் எட்டும் விலையில் சிறந்த கம்ஃபர்ட் வழங்குகிறது.
”Walkaroo Bounceez, Walkaroo+ போன்ற துணைப் பிராண்டுகள், கூடுதல் மென்மை, நவீன தொழில்நுட்பம் மற்றும் நீண்ட நேரம் அணிவதற்கான ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதே ஆய்வில், வாக்கரூ தென் இந்தியாவின் நம்பர் 1 காலணிப் பிராண்ட் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது — இது பிராண்டின் ஆழமான மண்டல இணைப்பையும், நுகர்வோரின் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.




















