`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
BB Tamil 9: ``நெருக்கமானவர்கள மட்டும் முதல் 5 இடத்துல வச்சுருக்காங்க'' - திவாகர் காட்டம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடக்கிறது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். பிறகு கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் ரேங்கிங் டாஸ்க் நடக்கிறது. "இந்த சீசன் தொடங்கி 39 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தர் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் மூவரும் தான் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ரேங்கிங் கொடுக்கப்போகிறீர்கள் என பிக் பாஸ் விக்கல்ஸ் விக்ரம், கனி திரு, அமித் பார்கவ் மூவரையும் நியமிக்கிறார்.

முதல் இடத்தில் சபரியும், இரண்டாவது இடத்தில் சுபிக்ஷாவும், மூன்றாவது இடத்தில் கெமியும் நிற்கிறார்கள். இதில் 13 வது இடத்தில் பார்வதியும், 14-வது இடத்தில் திவாகரும் நிற்கிறார்கள்.
`என்னால் 13-வது இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது' என்று பார்வதி சண்டைப்போடுகிறார். இவுங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டும் முதல் 5 இடத்துல நிற்க வச்சுருக்காங்க என திவாகர் விக்கல்ஸ் விக்ரம், கனி திரு,அமித் பார்கவ் மூவரையும் குற்றம் சாட்டுகிறார்.



















