செய்திகள் :

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

post image

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார்.

இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் மஜ்காவ் சிட்டி சிவில் கோர்ட்டிற்கு மாற்றி உத்தரவிட்டது.

இவ்வழக்கு நீதிபதி அஜானுதின் காசி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சொத்து வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க கோர்ட் கிளார்க் மனுதாரரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

மனுதாரர் கோர்ட்டிற்கு வந்திருந்தபோது கோர்ட்டில் கிளார்க்காக வேலை செய்யும் வாசுதேவ் என்பவர் மனுதாரரிடம் வழக்கு குறித்து பேச செம்பூர் உணவகத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

மனுதாரரும் அங்கு சென்றபோது இவ்வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டுமானால் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதில் 15 லட்சம் நீதிபதிக்கும், 10 லட்சம் தனக்கும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று மனுதாரர் தெரிவித்தார்.

அப்படி இருந்தும் வாசுதேவ் அடிக்கடி மனுதாரருக்கு போன் செய்து பேசினார். அதோடு லஞ்ச பணத்தை 15 லட்சமாக குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து வாசுதேவ் போன் செய்து பணம் கேட்டதால் இது குறித்து மனுதாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.

அம்மனுவை விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மனுதாரரிடம் லஞ்ச பணத்தை வந்து வாங்கிச் செல்லும்படி கூறி வாசுதேவை வரவழைக்கும்படி கூறினர். அதே போன்று வாசுதேவ் லஞ்ச பணத்தை வாங்க வந்தார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதோடு கைது செய்த பிறகு வாசுதேவ் மூலம் நீதிபதிக்கு போன் செய்தனர். வாசுதேவ் நீதிபதியிடம் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். அதனை நீதிபதிக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதியும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் நீதிபதி இன்னும் கைது செய்யப்படவில்லை.

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க

பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு

"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ... மேலும் பார்க்க

'உன் மீதே போக்சோ வழக்கு கொடுப்பேன்' தந்தையை மிரட்டிய 17 வயது மகள் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட மேற்கு நெய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு மனைவி, 17 வயதில் ஒரு மகள் மற்றும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பிளஸ் ... மேலும் பார்க்க

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க