செய்திகள் :

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்

post image

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கார் வெடிக்கும் தருணத்தைக் காட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகியிருக்கிறது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

Delhi Blast

இதில், மெதுவாக நகரும் வெள்ளை நிற ஹூண்டாய் ஐ 20 கார் நெருக்கமாக ஆட்டோக்கள், ரிக்‌ஷாக்கள் மற்றும் மற்ற வாகனங்களால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம்.

சிசிடிவியில் காட்சிகள் தடைபடும் வண்ணம் சக்தி வாய்ந்தததாக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து கார் மற்றும் பிற வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது. வெடிப்பின் அதிர்வில் சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த கட்டடங்கள், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

மத்திய அரசு "கொடூரமான பயங்கரவாதச் செயல்" என்று விவரிக்கும் இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாக விசாரணை நடத்தி வருகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி சரியாக 6:51 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விசாரணையில் வெடித்த காரின் எண் HR 26CE7674 எனக் கண்டறிந்துள்ளனர். Dr உமர் நபி என்பவரால் அந்த கார் ஓட்டிச்செல்லப்பட்டிருக்கிறது, 32 வயது மருத்துவரான அவருக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்போடு தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தீவிரவாத தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை 'வொயிட் காலர் தீவிரவாத தொகுதி' என அதிகாரிகள் அழைக்கின்றனர். இதுவரை 20 முதல் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு... மேலும் பார்க்க

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்... மேலும் பார்க்க

9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170... மேலும் பார்க்க

``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூ... மேலும் பார்க்க

``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே 'ஹுண்டாய் ஐ20' கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. சிசி... மேலும் பார்க்க