''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்...
Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!
திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
மெட்ரோ கேட் 1 அருகே கார் வெடித்த பிறகு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்த்தாகக் கூறப்படுகிறது. சுமார் 7:05 மணியளவில் அழைப்பு வந்திருக்கிறது தீயணைப்பு வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்துள்ளனர்.

வாகன வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து பல மீட்டர்கள் தூரம் வரையில் இருந்த கார்களில் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
சம்பவ இடத்திலிருந்து வரும் வீடியோக்கள் கார்கள் தீப்பற்றி எரிவதைக் காட்டுகின்றன. டெல்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Explosion reported near Red Fort, Delhi.
— Govinda kumar gupta (@govinda301197) November 10, 2025
A blast occurred in a car near Gate No.1 of Lal Qila Metro Station, leading to a fire that damaged 3–4 nearby vehicles.#RedFort#DelhiBlastpic.twitter.com/m8d962g1lZ
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக டெல்லி காவல் ஆணையரிடம் பேசியுள்ளார். தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.
முன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெடிப்பு நடந்த செய்தி மிகவும் கவலையளிக்கிறது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, இது ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெடிப்பு எவ்வாறு நடந்தது, இதற்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதி உள்ளதா என்பதை காவல்துறையும் அரசும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்.
















