Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ர...
பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!
2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (122 தொகுதிகள்) நவம்பர் 11-ஆம் தேதியில் நாளை நடைபெறவிருக்கிறது. NDA (பாஜக, JD(U), HAMS, LJP) மற்றும் மகாகத்பந்தன் (காங்கிரஸ், RJD, இடதுசாரி கட்சிகள் மற்றும் VIP) என இரு கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் இந்த பீகார் தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த தேர்தலைவிடவும் அதிகமான செலவுகளைச் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, இந்தத் தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் அதிகமான ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 2020-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலோடு ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் 1.5 மடங்கு அதிகமான செலவுகள் செய்யப்பட்டிருக்கிறது.
These are the helicopters lined up for Bihar elections at Patna airport. If anybody says india is a poor country,well he needs a reboot. pic.twitter.com/TnmKbSLJ7C
— Lt Col Sushil Singh Sheoran, Veteran (@SushilS27538625) November 5, 2025
இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 25 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தியுள்ளனர். தோராயமாக ஒரு ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் - ரூ 4 லட்சம் வரை செலவாகிறதாம். இதில் 12 தனி விமானங்களும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
NDA கூட்டணி ரூ.30 கோடி (1200 மணிநேரம்), மகாகத்பந்தன் கூட்டணி 10 கோடி (400 மணிநேரம்) என மொத்தம் ரூ 40 கோடி வரை ஹெலிகாப்டர் பயணங்களுக்காக மட்டும் செலவழித்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
கடந்த பீகார் தேர்தலில் ரூ.26 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பாஜக - காங்கிரஸ் இடையேயான போட்டி தீவிரமடைதிருப்பதால் கோடிகளில் கொட்டி ஹெலிகாப்டரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.




















