'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி & சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elang...
அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?
அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.
நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம் என்று உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்னென்ன மருத்துவ உதவி அல்லது சிகிச்சை?
இந்த மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளில் இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், உளவியல் ரீதியான பிரச்னைகளும் அடங்கும்.
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விசா தருவதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, இவர்களுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நிதி பாதுகாப்பு இருக்கிறதா?
இந்தக் கட்டுப்பாடுகளில் இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தெளிவாகக் கூறப்படவில்லை. இப்போதைக்கு விசா விண்ணப்பிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு ஒருவேளை விசா வழங்கப்பட்டால் அவர்களது மருத்துவச் செலவுகளைக் பார்த்துக்கொள்ள கூடிய அளவுக்கு, குறிப்பிட்ட நபருக்கு நிதி பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, குடியேற்றங்களைக் குறைக்க வேண்டும். இதற்காகத்தான், விசா நடைமுறைகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அவரது அரசாங்கம்.





















