செய்திகள் :

Kilimanjaro: ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை; விருதுநகர் சிறுவனுக்குக் குவியும் பாராட்டு

post image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25), கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தைச் சேர்ந்த (40) வயது அமர்நாத் ஆகியோர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண் எனப் பெயர்பெற்ற முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்தனர்.

கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறியவர்கள்
கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறியவர்கள்

இவர்கள் நவம்பர் 5 ஆம் தேதி ஏறத் துவங்கி 5,895 மீ உயரமுள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். பின்னர் நவம்பர் 7 ஆம் தேதி கிளிமாஞ்சாராவிலிருந்து கீழே இறங்கினர்.

இவர்களுடன் தாம்பரத்தைச் சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4, 720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார். உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தைப் பிடித்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு.

மேலும் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.