செய்திகள் :

வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; "இந்துத்துவா அரசியலைப் புகுத்தும் நடவடிக்கை" - பினராயி விஜயன் கண்டனம்

post image

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நாடு முழுவதும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சர்கள் சுரேஷ்கோபி, ஜோசப் குரியன், கேரள அமைச்சர் பி.ராஜிவ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

எர்ணாகுளத்திலிருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்குள் இருந்த மாணவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாடும் 'பரம பவித்ர மதாமி மண்ணில் பாரதாம்பயே பூஜிக்கான்' என்ற மலையாளப் பாடலைப் பாடினார்கள்.

அந்த வீடியோவை தென்னக ரயில்வே தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தது. அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அரசு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாடும் படல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் வந்தேபாரத் தொடக்கவிழாவில் கவர்னர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்
எர்ணாகுளம் வந்தேபாரத் தொடக்கவிழாவில் கவர்னர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தீவிர இந்துத்துவ அரசியலை ரகசியமாகப் புகுத்தும் நடவடிக்கை நடந்துகொண்டிருக்கிறது. மத வெறுப்பு, வகுப்புவாத பிளவு அரசியலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாடலை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ திட்டத்தில் கலந்தது அரசியலமைப்பு கொள்கையை மீறுவதாகும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைக் கூட சங்பரிவார் தங்கள் வகுப்புவாத அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பாடலை 'ஒரு தேசபக்தி பாடல்' என்ற தலைப்பில் தெற்கு ரயில்வே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னைத்தானே கேலிக்குள்ளாக்கியதுடன், இந்தியத் தேசியத்தையும் கேலி செய்துள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் ஆணிவேராகச் செயல்பட்ட ரயில்வே, இப்போது சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்-இன் வகுப்புவாத அஜண்டாவை நிறைவேற்ற குடை பிடிக்கிறது.

வந்தே பாரத் தொடக்க விழாவில் தீவிர இந்துத்துவா அரசியலை மறைமுகமாகப் புகுத்துவதைப் பார்க்க முடிந்தது. மதச்சார்பின்மையை அழிக்கும் குறுகிய அரசியல் மனநிலை இதன் பின்னால் உள்ளது. இதை உணர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உரு... மேலும் பார்க்க

மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் காந்தி கண்டனம் |வீடியோ

மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு பரிமாறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு ஒன்றைப் பதிவிட்டுள... மேலும் பார்க்க

தவெக: பிள்ளையார்பட்டி கோயிலில் என். ஆனந்த்; கரூர் வழக்கு ஆவணங்களை வைத்து சிறப்பு வழிபாடு

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த பேரிடர் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பிள்ளையார்பட்டி கோயிலில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார்... மேலும் பார்க்க

Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' - புகழும் ரயில்வே - வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பார... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' - தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அங்குசிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR)மூலம் 47 லட்சம்... மேலும் பார்க்க

போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்பட... மேலும் பார்க்க