மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் கா...
ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் ரமேஷுக்கு உதவுவது போல் நடித்து தங்களது ஏ.டி.எம் கார்டை முதியவரிடம் கொடுத்துவிட்டு முதியவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் திருடியதுடன், அதே ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 75 ஆயிரம் ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கி அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைத் திருடியுள்ளனர்.

இதை அறிந்த முதியவர் ரமேஷ், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏ.டி.எம் மையத்திலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், நூதன திருட்டில் ஈடுபட்ட இருவரும் வேலூர் மாவட்டம் பொய்கைநாவிதம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான கார்த்திக் 27, பார்த்திபன் 24, என்பது தெரியவந்தது.

இதையடுத்து வேலூருக்குச் சென்று சகோதரர்களைக் கைது செய்த போலீசார் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்குப் பயன்படுத்திவந்த சொகுசுக் காரையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.














