செய்திகள் :

மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் - மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!

post image

தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே... பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன்.

தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!
தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!

’தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது' என்றால், அது ஒற்றைத்தலைவலி. மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத்தாலேதான் வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, செல்போனை அழுத்திக்கிட்டே இருக்கிறது, தலைக்குக் குளிக்காம 'தண்ணி’ காட்டறது, எதற்கெடுத்தாலும் டென்ஷன், இதெல்லாம்தான் பித்தத் தலைவலிக்கு முக்கியக் காரணங்கள்.

இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100 மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும்.

மூக்கு ஒழுகி, தும்மலோடு வர்றது சைனசைடிஸ் தலைவலி. இதுக்கு, இஞ்சியைப், பொடிசா நறுக்கி நெய் சேர்த்து பொன் நிறமா நீர் வத்தற வரைக்கும் வறுத்துக்கணும். இதே அளவுக்குச் சீரகத்தையும் வறுத்து எடுத்துக்கணும்.

இரண்டையும் சேர்த்த அளவுக்கு வெல்லத்தை எடுத்து உதிர்த்துக்கணும். எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பாட்டுக்கு பின்னால, அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தா, சைனசைடிஸ் தலைவலி போறதோட திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்காது.

தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!
தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..!

தலைவலியோட சளி, இருமலும் சேர்ந்து இருந்தா, ஒரு டம்ளர் பசும்பாலில் 5 கிராம் அதிமதுரம், 5 கிராம் பெருஞ்சீரகம், 10 கிராம் பனங்கல்கண்டு... இல்லேன்னா, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடா தினமும் குடிச்சிட்டு வந்தா, மூணு பிரச்னையும் சரியாகும்.

தலைவலிக்குன்னே சுக்குத் தைலம், கொம்பரக்குத் தைலம், குறட்டப்பழத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம்னு சித்த வைத்தியத்துல நிறையத் தைலங்கள் இருக்கு. இதுல ஏதாவது ஒண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு வந்தா தலைவலி பறந்திடும். ஆனா, எல்லாருக்கும் தைலக்குளியல் சரியா வரும்னு சொல்ல முடியாது. நாடி பிடிச்சு சொல்ற மருத்துவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.

இப்பல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூடத் தலைவலி வருது. பார்வைத்திறன் குறைவுகூடக் காரணமாயிருக்கலாம். இதுக்கு, கண் மருத்துவரைத்தான் பார்க்கணும்.

பி.பி கட்டுக்குள் இல்லைன்னா, தலைவலிதான் முதல் அறிகுறி. அதுவும் குறிப்பா காலையில் எழுந்ததும் தலை வலிச்சா, முதல்ல ரத்த அழுத்தத்தை 'செக்’ பண்ணிக்கணும். அதுவும் உட்கார்ந்து, படுத்து, நின்னு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சாதான், பிரச்னையை சரியா கண்டுபிடிக்கலாம்.

அந்தக்கால டாக்டரெல்லாம் அப்படித்தான் பார்ப்பாங்க. சரியான மருந்தை மருத்துவர் பரிந்துரையோட சாப்பிடுவது முக்கியம்.

அதோடு, முருங்கைக் கீரை சூப், வெள்ளைத்தாமரை பூ இதழ் உலர்த்திய பொடி அரை ஸ்பூன் தினசரி எடுத்துக்கலாம். கூடவே, 1 லிட்டர் நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் சீரகம் போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தேய்ச்சு வாரம் இருமுறை குளிக்கணும். ராத்திரி எந்தத் தடையுமில்லாம, 6 மணி நேரம் தூங்கணும். தினசரி பிராணாயாமப் பயிற்சி. அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்க, சீதளி பிராணாயாமம் செய்தா, தலைவலி காணாமலேயே போகும்.

Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?

Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்தஅழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா?பதி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும்இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தல... மேலும் பார்க்க

Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்

'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Vegஅசைவ உணவுகள் நல்லவையா?"அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan:என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டி... மேலும் பார்க்க

ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?

ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய... மேலும் பார்க்க

Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்தி... மேலும் பார்க்க