கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
Deepika Padukone: "தாயான பிறகு இதெல்லாம் என்னிடம் மாறியிருக்கிறது!" - தீபிகா படுகோன்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி ‘கிங்’ படத்தில் தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார்.

மற்றொரு பக்கம் அட்லி - அல்லு அர்ஜூன் இயக்கும் படத்திலும் முக்கியமானதொரு கதாபாத்திரத்திற்கு கமிட்டாகியிருக்கிறார் தீபிகா படுகோன்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் தீபிகா படுகோன்.
அவர், “தாயான பிறகு பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. என்னிடம் பொறுமையும் அதிகமாகியிருக்கிறது எனச் சொல்லலாம். தாய்மை என்னை கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளி, சமூகமயமான நபராக மாற்றுகிறது.

நான் ஒருபோதும் சமூகமயமான நபராக இருந்ததில்லை. இப்போது ப்ளே ஸ்கூலில் மற்ற பெற்றோர்களுடன் பேசுகிறேன்.
தாய்மை உங்களை நல்ல விதத்தில் உங்கள் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளுகிறது. நான் எப்போதும் தாயாக விரும்பினேன். இப்போது, நான் தாயாக என் சிறந்த பாத்திரத்தை செய்து வருகிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.


















