மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் கா...
கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்
கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு, அவர்கள் போட்டிருந்த கொசு வலையை வெட்டி அந்தச் சிறுமி கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.

சிறுமியைக் காணவில்லை என்று தேடியபோது, நேற்று மதியம் அந்த ரயில் நிலையத்தின் சாக்கடை அருகே ரத்த வெள்ளத்தில் சிறுமி மீட்கப்பட்டாள்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் சிறுமி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டி கூறுகையில், "என்னுடன்தான் தூங்கிக் கொண்டிருந்தாள். நான்கு மணியளவில் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவளை எடுத்துச் சென்றது கூட எனக்கு தெரியவில்லை.
கொசு வலையை வெட்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது நிர்வாணமாக மீட்கப்பட்டிருக்கிறாள்.
எங்களுடைய வீட்டை இடித்துவிட்டார்கள். தெருவில்தான் வசிக்கிறோம். நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்குத்தான் எந்த வீடும் இல்லையே" என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த வழக்கை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.














