செய்திகள் :

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்...

‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண்டுகொண்டிருக்கிற மத்திய-மாநில ‘ராஜா’க்களை நம்பி நம்பி, மீண்டும் மீண்டும் உதைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்- சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும்!

இதற்கு உடனடி சாட்சி, நெற்களஞ்சியமான காவிரி டெல்டா உட்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் அறுவடை செய்து மூட்டைக் கட்டப்பட்ட நெல் மணிகள், சமீபத்திய மழைக்கு முளைவிட்டு வீணாகிக் கிடப்பதுதான்.

‘போதுமான குடோன் வசதி, சாக்குகள், தார்ப்பாய்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்; 22% ஈரப்பதத்தில் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களில் நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்களை அமைக்க வேண்டும்’ என்றெல்லாம் காலகாலமாகவே கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள்.

போதுமான வசதிகளை செய்து தர வேண்டிய தமிழ்நாடு அரசு, அதையெல்லாம் சாமர்த்தியமாக மறைத்துவிட்டு, ‘22% ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் நாடகத்தை வழக்கம்போல அரங்கேற்றியது. உடனே, ஓடோடி வந்த மத்திய அரசின் உணவுத்துறை அதிகாரிகள்... தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘ஆய்வு’ என்கிற பெயரில் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு நெல் உற்பத்தி ஆகும் என்று மத்திய, மாநில அரசுகளால் கணிக்க முடியும். அதேபோல, மழை மற்றும் வெயிலின் அளவு குறித்த வானிலை நிலவரத்தையும் முன்கூட்டியே கணிக்க முடியும். இதையெல்லாம் மனதில் கொண்டு போதுமான குடோன் வசதிகளை மாநில அரசு செய்திருக்க முடியும். 22% ஈரப்பதத்தில் கொள்முதல் செய்வதற்கு நிரந்தர உத்தரவை மத்திய அரசு வெளியிட்டிருக்க முடியும்.

இது எதையுமே செய்யாமல் தட்டிக் கழித்துவிட்டு, நெல் மூட்டைகளை மழையில் நனையவிட்டு முளைக்க வைப்பதும்; 17%-க்கு மேல் ஈரப்பதம் இருப்பதால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என்று விவசாயிகளைக் கண்ணீரில் ஆழ்த்துவதும்தான் தொடர்கிறது.

‘அதுதான் நாம் கடிதம் எழுதிவிட்டோமே’ என்று கைதட்டிக் கொண்டிருக்கிறது, மாநிலத்தை ஆளும் தி.மு.க அரசு. ‘நாம்தான் ஆய்வு செய்வதற்கு குழுவை அனுப்பிவிட்டோமே’ என்று கும்மியடித்துக் கொண்டிருக்கிறது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு.

ம்... ‘நெல் மூட்டைகள் மழையில் நனைவது, விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவுப் பிரச்னை. இது, நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்துவிடும்’ என்பதையெல்லாம்கூட உணராத ஆட்சியாளர்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது, நம்முடைய தவறுதானே!

இனியாவது உணர்வோமா?!

- ஆசிரியர்

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வ... மேலும் பார்க்க

தமிழக Amni Busகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம்; "கேரளாவுக்கு சவாரி இல்லை" - உரிமையாளர்கள்; என்ன நடந்தது?

சென்னை, கோவை, மதுரை எனப் பல பகுதியிலிருந்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று (07.11.2025) கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்க... மேலும் பார்க்க