''எங்களுக்கு குப்பை வேண்டாம்!" - டிரெண்டாகும் #BoycottMajorRavi ஹாஷ்டேக் - பின்...
Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live
தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
தமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்
"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலை
முன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெடிப்பு நடந்த செய்தி மிகவும் கவலையளிக்கிறது. இதில் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, இது ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெடிப்பு எவ்வாறு நடந்தது, இதற்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதி உள்ளதா என்பதை காவல்துறையும் அரசும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்.
டெல்லி கமிஷனர் சொல்வதென்ன?
டெல்லி கமிஷனர், "இன்று மாலை 6:52 மணியளவில் மிகவும் மெதுவாக வந்து சிகப்பு விளக்கு அருகே நிறுத்தப்பட்ட கார் வெடித்துள்ளது. சக்திவாய்ந்த வெடிப்பால் அருகில் இருந்த கார்களும் சேதமடைந்துள்ளன. FSL முதல் NIA வரை அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளன. சிலர் இறந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். நிலமையைக் கண்காணித்து வருகிறோம். உள்துறை அமைச்சர் எங்களை அழைத்தார், அவரிடம் தகவலைப் பகிர்ந்துள்ளோம்." எனக் கூறியிருக்கிறார்.
அமித் ஷா, மோடி ஆய்வு
உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி கமிஷனரிடம் நிலைமையைக் கேட்டறிந்தார். பிரதமர் மோடி சூழலை ஆய்வு செய்து வருகிறார்.
8 பேர் உயிரிழப்பு
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 24 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன. தீவிர சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர்களை அருகே இருக்கும் 'LNJP' மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்
Delhi Car Blast
இன்று (நவ 10) மாலை 6.50 மணியளவில் டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த சம்பவத்தால் அருகே இருந்த நான்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. சக்தி வாய்ந்த இந்த வெடிப்பால பல மீட்டர் தொலைவில் இருந்த கார்களின் கண்ணாடிகளும் சிதறியதாகக் கூறப்படுகிறது.















