`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
அவங்களுடைய பேக்கரி அனுபவம் ஐஸ்கிரீம் பார்லரை டெவலப் பண்ண உதவும்; பிசினஸில் இறங்கிய விஷ்ணு-சௌந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 ல் ரன்னராக வந்த சௌந்தர்யா ஏழாவது சீசனில் டாப் 5 பேரில் ஒருவராக வந்த விஷ்ணுவுக்கு புரப்போஸ் செய்தது எல்லோருக்கும் தெரிந்ததே.
கடந்த ஜனவரியில் அந்த சீசன் முடிந்த நேரத்தில் நாம் விஷ்ணுவிடம் பேசியபோது, 'இந்த ஆண்டுக்குள் நிஜ தம்பதிகள் ஆனாலும் ஆகலாம்' எனச் சொல்லியிருந்தார்.
லைஃப் பார்ட்னர் ஆகிற செய்தியைச் சொல்வாரென எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இருவரும் சேர்ந்து பிசினஸ் தொடங்கியிருக்கிறார்கள்.
சென்னை பெசன்ட் நகரில் இருவரும் சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லர் திறந்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் நடந்த பார்லரின் திறப்பு விழாவில் விஷ்ணு சௌந்தர்யாவுடன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களுடன் பிக் பாஸ் 8வது சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் உள்ளிட்ட செலிபிரிட்டிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
'மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம் பார்லரா' என விஷ்ணுவிடம் கேட்டால்,
'இங்க தான் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு ப்ரோ. 'மோக்ஷா மர்ஷல்' பிராண்ட் ஐஸ்கிரீமை யாரும் எந்த நேரத்துலயும் சாப்பிடலாம். புரோட்டீன் அதிகம் கொண்ட பிராண்ட். வழக்கமா ஐஸ்கீரிமில் சேர்க்கிற சர்க்கரை இந்த ஐஸ்க்ரீம்ல இருக்காது. அதனால வெயில் காலத்துலதான் சாப்பிடணும்னு வெயிட பண்ணிட்டிருக்கத் தேவையில்ல. வருஷம் முழுக்க சாப்பிடலாம். ஆரோக்கியமான ஐஸ்கீரீம்' என்கிறார்.

இந்த வருஷம் முடியறதுக்குள் சவுந்தர்யாவை லைஃப் பார்ட்னர் ஆக்குவீங்கன்னு பார்த்தா பிசினஸ் பார்ட்னர் ஆக்கிட்டீங்களே' என்றால் 'சவுண்டு ஃபேமிலிக்கு ஏற்கனவே பேக்கரி பிசினஸ்ல அனுபவம் இருக்கு. அதனால இந்த பிசினஸ்ல அவங்க ரோல் நிச்சயம் உண்டு. பிசினஸ் நல்லபடியா பிக் அப் ஆகிடுச்சுன்னா மத்த விஷயங்கள் தானா விறுவிறுன்னு நடந்திடப் போகுது'' என்கிறார்



















