சாலையோரம் கீபோர்டு வாசித்து தெருநாய்களின் பசியை போக்கும் முதியவர் - யார் இவர்?
சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில், அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக்கோரி ஜெயராஜின் மனைவி ஜெயராணி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தபோது அவ்வப்போது அவகாசம் வழங்கப்பட்டது.
அத்துடன் ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கினை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டுமென சி.பி.ஐ தரப்பில் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏன் மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி முரளி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

“இந்த வழக்கில் போலீஸாரின் கூட்டுச்சதி இருக்கலாம் என்பதால் அதற்கான பிரிவையும் சேர்க்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அது குறித்து கீழமை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த பிரிவு சேர்க்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டது. அந்த பிரிவுகளையும் சேர்த்து சாட்சிகளை மீண்டும் விசாரித்தால் ஏற்படும் பின் விளைவுகளை அறிவீர்களா? என கேள்வி எழுப்பி, இதற்கும் சி.பி.ஐ தரப்பில் விளக்கம் கேட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
















.jpg)


