"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' ...
காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி
அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை கைது செய்து கை, கால்களை கட்டி தனி விமானத்தில் போட்டு அவர்களது சொந்த நாட்டில் கொண்டு போய் இறக்கிவிடும் செயலை செய்தார். அதோடு வெளிநாட்டினரின் விசாவை நீட்டிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தையும் கடுமையாக அதிகரித்துவிட்டார்.
இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதிலும் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சென்ற குஜராத்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற பல தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வருவது இப்போது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 73 வயது பெண் கடந்த 2017ம் ஆண்டு தனது மகன் மற்றும் மருமகளுடன் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு சென்றார். அவர்கள் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு அப்பெண்ணின் மகன் அமெரிக்காவில் நிதி மோசடி செய்து வந்தார். அடிக்கடி யாரிடமாவது பெரிய அளவில் பணம் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
தற்போது 73 வயது மூதாட்டி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தன்னை விட 9 வயது குறைவான ஆப்பிரிக்கா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பிரஜையை திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு திருமண சான்றிதழும் பெற்றுவிட்டனர். ஆனால் குஜராத் பெண்ணிற்கு ஆங்கிலம் தெரியாது. அவர் திருமணம் செய்து கொண்ட நபருக்கு குஜராத்தி தெரியாது. இதனால் அவர்கள் இருவரும் எப்படி பேசிக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு 73 வயது பெண் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார்.
விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தபோது அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் திருமணம் செய்து கொண்ட இருவரும் எப்படி மொழியை புரிந்து கொள்ளமுடியாமல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர் என்று கேள்வி எழுப்பினர். அதோடு இத்திருமணத்தில் சந்தேகம் எழுப்பினர். மொழி அவரது குடியுரிமை கோரிக்கைக்கு தடையாக வந்து நின்றது. இறுதியில் அம்மூதாட்டியின் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இப்போது அப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற அமெரிக்க அரசு 90 நாட்கள் கெடு விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெற திருமணம் ஒரு வழியாகும். அதனை பயன்படுத்தி சிலர் போலி திருமணம் செய்து குடியுரிமை பெறுகின்றனர். இது போன்ற போலி திருமணத்தால் உண்மையிலேயே திருமணம் செய்து குடியுரிமை பெற நினைப்பவர்கள் கூட கடுமையான சவால்களை சந்திக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த ஹர்ஜித் கவுர் என்ற பெண்ணை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தினர். அப்பெண் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் அவர் அமெரிக்காவில் தங்கிக்கொள்ள தொடர்ந்து அவரது விசா நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடைசியாக விசா நீட்டிப்புக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று பஞ்சாப்பிற்கு நாடு கடத்திவிட்டனர்.

















.jpg)

