BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி
"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' குறித்து ரியோ ராஜ்
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர்.
இப்படம் (அக்.31) தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் 'ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (நவ.14) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய ரியோ ராஜ், " இதற்கு முன் நான் நடித்த படங்கள் ஒரு சிலருக்கு பிடித்திருக்கும்.
ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கும். ஒரு மிக்ஸ்ட்டான கருத்துகள் வரும்.
ஆனால் ஒரு என்டர்டெயினர் படமாக இருந்தால் கருத்துகள் காணாமல் போய்விடும் என்பதை இப்படம் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
என்னுடன் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக என்னுடைய மனைவி ஸ்ருத்திக்கு நன்றி.
படம் நடிக்கிறேன் என்று சொல்லி நான் கொடுத்தத் தொல்லைகளை பொறுத்துக்கொண்டு அன்பை மட்டுமே கொடுத்ததற்கு நன்றி.
இது ஆண்களுக்கான ஒரு படம் என்று சொல்லிக்கொண்டே தான் இருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை என்பதை சொல்ல தான் நாங்கள் முயற்சி செய்தோம்.

ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கக்கூடிய ஆணுக்கு ஒரு சரியான பார்ட்னர் தேவை என்பதை தான் நாங்கள் இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்தோம்.
நிறைய பேர் கால் பண்ணி படம் நன்றாக இருந்தது என்று சொல்லாமல் நான் மனைவியோடு சென்று இந்தப் படத்தைப் பார்த்தேன் இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம் என நிறைய பேர் எங்களைப் பாராட்டி இருந்தார்கள்.
அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது" என்று பேசியிருக்கிறார்.




.jpg)















