செய்திகள் :

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

post image

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது.
கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் நவீன் யாதவ்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் நவீன் யாதவ்

இந்த ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 98,988 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

"பணம், பவர், சாதி; நடிகர்கள் அரசியலில் செய்யும் தவறு என்ன?" - விஜய்க்கு அறிவுறை சொன்ன ரோஜா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. 1999-ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சி அரசியலில் களப்பணிகள், பிரசாரப் பணிகளைச் ச... மேலும் பார்க்க

"ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம்" - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன?

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொண்டுவரவும் ஆந்திரா, தெலங்கனா மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குத... மேலும் பார்க்க

ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்ப... மேலும் பார்க்க

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச... மேலும் பார்க்க