செய்திகள் :

`ஜப்பானுக்கு செல்லாதீர்கள்' - தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்?

post image

'தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான 'அச்சுறுத்தலாக' பார்க்கப்படும்?'

'தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்'.

இது கடந்த 7-ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் சானே தகாச்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும்.

இந்த உரையாடல் தான் தற்போது ஜப்பான், சீனா இடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது.

சானே தகாச்சி
சானே தகாச்சி

என்ன பிரச்னை?

2015-ம் ஆண்டு ஜப்பான் பாதுகாப்பு சட்டத்தின் படி, 'நாட்டிற்கான அச்சுறுத்தல்' என்று ஏதாவது கருதப்பட்டால், அந்தச் சூழலுக்கு எதிராக ஜப்பான் தன்னுடைய தற்காப்பு படையை களமிறக்கலாம்.

தைவானை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பான் பிரதமர் தைவான் குறித்து இப்படி பேசியிருப்பது சீனாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

சீன தூதர் பதிவு

அடுத்த நாளான, 8-ம் தேதி, ஜப்பான் ஒசாகாவில் சீன தூதர், தகைச்சி பேசியிருந்த செய்திக் கட்டுரையை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'தேவையில்லாமல் தலையிடுபவரின் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்கிற அர்த்தத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதை சொலவடைபோல் பதிவிட்டிருந்ததில், 'தலை வெட்டப்படும்' என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

சீனா
சீனா

சீன தூதர் ஜப்பான் பிரதமரின் தலையை வெட்டுவதாக கூறுகிறார் என்று ஜப்பானில் பெரிய பிரச்னை வெடித்தது. இதையடுத்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இருந்தும் ஜப்பான் - சீனா இடையே வார்த்தைப்போர் தடித்துக்கொண்டே போகிறது.

இந்த நிலையில் தான், ஜப்பானின் சீன தூதரகம், "சீனர்கள் யாரும் ஜப்பானுக்கு வர வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளது.

`வாஷ்அவுட்' ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் - என்ன நடந்தது?

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில... மேலும் பார்க்க

'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெ... மேலும் பார்க்க

US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார். இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதி... மேலும் பார்க்க