``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - த...
US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார்.
இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்தி என்று ட்ரம்ப் கூறுகிறார்.

மக்களின் பரிசு
ஆனால், ஏற்கெனவே குறைவான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக விலை என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு மட்டுமல்ல, மளிகை பொருள்கள் கூட அதிக விலைக்கு தான் விற்கப்படுகின்றன.
சமீபத்தில் விர்ஜினியா, நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன விலை உயர்விற்கு பதிலடியாக, இந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்கள் தோல்வியையே பரிசளித்தனர்.
'பேக்' அடித்த ட்ரம்ப்
இதையடுத்து தற்போது ட்ரம்ப் அமெரிக்கர்களின் உணவுகளில் மிக முக்கியமாக இடம்பெறும் பொருள்களுக்கு 'இறக்குமதி பரஸ்பர வரி'யை ரத்து செய்துள்ளார். இதில் பீஃப், டீ, ஆரஞ்சு, மசாலா பொருள்கள், தக்காளி, வாழைப்பழம் போன்றவை அடங்கும்.

ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி தான் விலக்கப்பட்டுள்ளதே தவிர, முன்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருந்த வரி தொடர்ந்து இந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்படும். அதாவது கடந்த ஆகஸ்ட் முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தான் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த வரிகள் தொடரும்.













