US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்...
``தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரைப் போல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' - நயினார் நாகேந்திரன்
'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற தலைப்பில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் அவர் மக்களை சந்தித்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி பீகாரில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் 200 இடங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்களோ அதே மாதிரி தமிழகத்திலும் 2026-ல் பெருவாரியான இடங்களை பெறும்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக சில அதிகாரிகளே செயல்படுகிறார்கள் என்று இ.பி.எஸ் குற்றஞ்சாட்டியுள்ளாரே? என்ற கேள்விக்கு,
"எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியே கலந்து கொள்ளவில்லை.
இதற்கு முன் இதேபோன்று எஸ்.ஐ.ஆர் தீவிர திருத்தம் செய்துள்ளனர். எதைச் செய்தாலும் மாநில முதலமைச்சர் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும்போதும் இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.ஐ.ஆருக்காக நீதிமன்றம் சென்றனர். இதை நிறுத்த முடியாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது.
ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி வருகின்றனர் இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. இதற்காக நீதிமன்றம் செல்ல அவர் தயாராக இல்லை”.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக த.வெ.க ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனரே? என்ற கேள்விக்கு,
"அவரவர் மனநிலையை பொறுத்தது. மக்களுக்கு தேவையான விஷயங்கள், நாட்டிற்கு தேவையான விஷயங்களை சொல்றதுதான் நல்ல தலைவர்களுக்கு அழகு. எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய விஷயமா எல்லாரும் கேட்டுக்கிட்டே இருக்கறீங்க. இதுல என்ன இருக்கு இறந்தவர்கள் வாக்கை நீக்க வேண்டும். வெளியூருக்கு போனவங்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் இதுதான் SIR, அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப சிறையில் இருக்காரு, இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு."

SIR இதுக்கு முன்னாடி பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் இதற்கு முன்னாடி பீகாரில் நீக்கியது போல் 60 லட்சம் பேரை நீக்கவில்லையே? அத்தனை பேரும் போலி வாக்காளர்களா? இறந்து போனவர்களா? என்ற கேள்விக்கு,
“வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்காளத்தில் வழியாக ஊடுருவி திருப்பூர் வரைக்கும் வருகிறார்கள். கடைசில விசாரித்து பார்த்தார்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் நம்ம ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். பீகாரில் நீக்கப்பட்ட 62 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இறந்து விட்டனர். நம்முடைய முதலமைச்சர் தொகுதி கொளத்தூரில் 9,000 வாக்கு அதிகமாக உள்ளது”.
பொதுக்கூட்டத்தில் பேசும்போது மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துப்போனால் தான் நிதிகள் கிடைக்கும் என்று பேசினீர்கள்? தமிழ்நாடு அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறதா? அதனால்தான் தரவில்லை என்று சொல்கிறீர்களா?
“பி.எம் ஸ்ரீ கல்வி திட்டத்தில் மத்திய அரசு சில நார்ம்ஸ்களை கொடுக்கிறது. அதை வேண்டாம் என்கிறார். ஆனால் இவர்கள் கூட்டணியில் உள்ள கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் அவரே உடன்பட்டு கையெழுத்து போட்டு அதை வாங்கிவிட்டார். அவருடைய மக்கள் மேல் அவருக்கு அக்கறை இருக்கிறது”.

அவர்கள் ஏற்கவில்லை. விதிகளை மறுவரையறை செய்ய கோரியுள்ளார்” என்ற கேள்விக்கு,
“இன்று இரண்டாம் வகுப்பு ஏன்? எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் கையில் செல்போன் வைத்து விளையாடுகிறது. நாலேட்ஜ் வளர்ந்து அப்டேட் ஆக வேண்டும்.
கேரளாவில் 10,000 கோடி ரூபாய் வாங்கி போயிருக்கிறார் பினராய் விஜயன். நீங்க என்ன வாங்கி வந்தீர்கள்? புரட்சி தலைவர் என்ன சொன்னார்? உரிமைக்கு குரல் கொடுப்போம்” சொன்னாரா இல்லையா? அவையெல்லாம் செய்ய வேண்டும். மாநில அரசு மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டும்.
கஞ்சா எவ்வளவு விற்கப்படுகிறது? ஜாபர் சாதிக் யார்? எவ்வளவு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது? எங்க கட்சிய விட்டுவிடுங்கள். ஒவ்வொரு குக்கிராமத்திலும் கஞ்சா டீலர் இருக்கிறார்.”
குஜராத்தில் கஞ்சா சிக்கவில்லையா என்ற கேள்விக்கு, "பிடிபட்ட தமிழ்நாட்டைப் பற்றி முதல்ல பேசுங்கள். நீங்க குஜராத் ஏன் போகிறீர்கள்? இட்லி தோசையை முதலில் சாப்பிடுங்கள். இரண்டாவது சப்பாத்தி சாப்பிடுங்கள்" என்றார்.


















