செய்திகள் :

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

post image

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், தாசில்தாரும் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிவிபத்தில் சிக்கி போலீஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் தாசில்தாரும் உயிரிழந்தார்.

வெடிவிபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 29 பேர் காயம் அடைந்தனர்.

வெடிகுண்டு விபத்து நடந்த இடம்
வெடிகுண்டு விபத்து நடந்த இடம்

அவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த வாகனங்களும் மோசமாக சேதம் அடைந்தன.

வெடிகுண்டு சம்பவம் அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

போலீஸ் நிலையத்திற்கு பக்கத்தில் இருந்த வீடுகளின் ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் கூட வெடிகுண்டு சத்தத்தில் உடைந்து சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் நினைத்ததாக அருகில் வசித்த மக்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு 3000 கிலோ வெடிமருந்துகளை காஷ்மீர் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் சேமித்து வைத்திருந்தனர். அதுதான் இப்போது வெடித்து சிதறி இருக்கிறது.

வெடிகுண்டு விபத்து நடந்த இடம்
வெடிகுண்டு விபத்து நடந்த இடம்

நவ்காம் போலீஸ் நிலையம் தான் சமீபத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டதை கண்டுபிடித்தது. ஸ்ரீநகர் பகுதியில் ஜெய்ஸ் இ முகமத் போஸ்டர்களை பார்த்து நவ்காம் போலீஸ் நிலையம் அது குறித்து விசாரித்து அதனை ஒட்டிய டாக்டர் அடில் என்பவரை கைது செய்தது.

அதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஹரியானாவில் உள்ள பரிதாபாத் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த முஜாமில் சகீல் என்ற டாக்டரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி 3 ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மதுரை நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்த இராட்சத லாரி; போக்குவரத்து பாதிப்பு | Photo Album

இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கொடை ரோடு அருகே ராட்சச இறக்கை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; எப்படி நிகழ்ந்தது?

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி இராட்சச காற்றாலை இறக்கையை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர்-கட்னி பிரிவில் லால் காடன் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவ 4) கோர்பா பயணிகள் ரயில், நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 11 பேர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சிறுத்தை வந்தது எப்படி? - விக்கிரவாண்டி டோல்கேட்டில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு அருகே, இன்று அதிகாலை வராக நதியின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வ... மேலும் பார்க்க