செய்திகள் :

திண்டுக்கல்: கொடை ரோடு அருகே ராட்சச இறக்கை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; எப்படி நிகழ்ந்தது?

post image

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி இராட்சச காற்றாலை இறக்கையை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது.

அம்மையநாயக்கனூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெயனர் லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திண்டுக்கலில் ராட்சச இறக்கை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திண்டுக்கலில் ராட்சச இறக்கை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

இந்த நேரத்தில் கண்டெய்னர் லாரியின் எதிரில் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தினால் திண்டுக்கல்-மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கலில் ராட்சச காற்றலை இறக்கை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திண்டுக்கலில் ராட்சச காற்றலை இறக்கை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமையநாயக்கனூர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சரி செய்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்: மதுரை நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்த இராட்சத லாரி; போக்குவரத்து பாதிப்பு | Photo Album

இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர்-கட்னி பிரிவில் லால் காடன் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவ 4) கோர்பா பயணிகள் ரயில், நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 11 பேர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சிறுத்தை வந்தது எப்படி? - விக்கிரவாண்டி டோல்கேட்டில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு அருகே, இன்று அதிகாலை வராக நதியின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வ... மேலும் பார்க்க

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர். பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்க... மேலும் பார்க்க

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 ம... மேலும் பார்க்க

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்... மேலும் பார்க்க