காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வ...
`வாஷ்அவுட்' ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் - என்ன நடந்தது?
பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி.
ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை.
பெரும்பாலானவேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.
இந்த நிலையில், பீகாரின் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜன் சூரஜ் கட்சியின் தராரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அக்டோபர் 31-ம் தேதி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சந்திரசேகர் சிங்-க்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதே பாட்னாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடைல் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் சந்திரசேகர் சிங் 2,271 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், நேற்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் சந்திரசேகர் சிங்குக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
யார் இவர்?
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகர் சிங், குர்முரி கிராமத்தைச் சேர்ந்தவர். தனது சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெற்ற இவர், ஜன் சூராஜ் கட்சி உருவான பிறகு பிரசாந்த் கிஷோரால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார், பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரின் மரணச் செய்தி கிராமத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.














.jpg)

