செய்திகள் :

̀̀̀"கமல் - ரஜினி கூட்டணி; 'தலைவர் 173' லிருந்து சுந்தர் சி விலகியது ஏன்?" - கமல் சொன்ன பதில்!

post image

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் - ரஜினி - சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. கோலிவுட் வாட்டாரம் முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது.

தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவிப்பு

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்.

இதுகுறித்து சுந்தர் சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம் வாழ்வில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை.

'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அளித்த அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். அதோடு எனது மன்னிப்பையும் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியிருந்தார்.

ரஜினி, கமல்

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இந்தப் படத்திலிருந்து சுந்தர் சி விலகிவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். அப்புறம் எப்படி மூவரும் இணைய முடியும். என்னைப் பொறுத்தவரை நான் தயாரிப்பாளர் இப்படத்தில். என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அதுதான் அரோக்கியமானது.

அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்" என்று கூறியிருக்கிறார் கமல்.

"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' குறித்து ரியோ ராஜ்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருத... மேலும் பார்க்க

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் 'கும்கி'. தற்போது அதன் இரண்டாம் பாகமான 'கும்கி 2' நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட... மேலும் பார்க்க

Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ - `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது. விஜய் - சூர்யா காம்போ, ஆக்‌ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ... மேலும் பார்க்க

"இதனால்தான் நடிப்பதில்லை; சினிமாவில் நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்" -ரோஜா நெகிழ்ச்சி

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என்... மேலும் பார்க்க

Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72.உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த... மேலும் பார்க்க